அதிமுக, திமுகவும் பங்காளி சண்டை போட்டு கொள்வார்கள்.. என்னை திட்ட ஒன்று கூடுவார்கள் ; அண்ணாமலை விமர்சனம்…!!
Author: Babu Lakshmanan3 February 2024, 8:22 am
திருப்பத்தூர் ; நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததிற்கு வாழ்த்துகள் என்றும், இது ஒரு கடினமான பயணம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ஆம்பூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்க்கொண்டார். ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அண்ணாமலையிற்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது :- புதியதாக யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை மனதார பாரதிய ஜனதா கட்சி வரவேற்கும். விஜய் அவர்களின் அறிவிப்பு பிறகு கூட எனது சமூக வலைதளத்தில் பதிவு போட்டுள்ளேன்.
ஒரு நோக்கத்துடன் வந்துள்ளார்கள். வரட்டும், மக்களுக்கு எப்போதுமே வாய்ப்புகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தனது கொள்கையை முடிவு செய்த பின்னர், மக்கள் அவர்களை முடிவு செய்வார்கள். தமிழக மக்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆழ்ந்து சிந்தித்து ஊழல் இல்லாத சமூகத்தை யார் கொடுக்க முடியும் என்ற வாதத்தை எல்லா கட்சியும் முன்வைக்கும் முன் மக்கள் முடிவெடுப்பார்கள். இந்த காலத்தில் எல்லோரும் முழுநேர அரசியல்வாதிகள்.
வேகமாக அரசியல் சுழற்சிகள் இருக்கின்றது. 1885ல் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் தற்போது எந்த நிலைமையில் இருக்கிறார்கள் என்று பாருங்கள். அதனால், அரசியலுக்கு வரக்கூடிய நடிகர் விஜய் எங்களது வாழ்த்துகளை தெரிவிப்பது மட்டுமல்லாமல், இது ஒரு கடினமான பயணம், எளிமையான பயணம் கிடையாது. ஒவ்வொரு வாக்காக, ஒவ்வொரு சிந்தனையாக கொண்டு வரவேண்டும், அதில் இறங்கி இருக்கின்றார்.
அதில் தமிழக மக்களுடைய எண்ணத்தை வெளிபடுத்த போகிறார். மக்கள் முடிவு எடுக்க வேண்டும். பார்ப்போம் 2026 களம் எப்படி இருக்கிற போது என்று. மேலும், உலக முதலீட்டார்கள் மாநாடு நடந்து 10 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் மறுபடியும் ஸ்பெயின் நாட்டிற்கு முதல்வர் போகிறார். அங்கு ஏன் 10 நாட்கள் போகவேண்டும். இந்த பயணத்தை மாநில அரசு அதிகாப்பூர்வமாக அறிவித்த பயணம் இல்லை. மாநில அரசு உண்மையை சொல்ல வேண்டும்.
முதல்வர் ஸ்பெயின் நாட்டிற்கு முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு சென்றிருப்பதை நான் நம்பவில்லை. குற்றச்சாட்டை வைப்பதை விட மாநில அரசு இதை தன்னிலை விளக்கமாக அறிவிக்க வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கனிமவளம் மூலம் ஆயிரம் கோடியிற்கு கீழ் தான் அரசிற்கு வருமானம் வருகிறது. ஆனால், ஒரு லட்சம் கோடி மேல் கனிமவளம் வெளிநாடுகளுக்கு செல்கிறது. இந்த பணம் இருந்தால் நாட்டில் ஊழலை ஒழித்து விடலாம். இவ்வளவு பெரிய ஆறுகள் ஓடும் மாநிலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் தான் அரசுக்கு வருமானம் வரும் என்றால் குழந்தை கூட நம்பாது. ஒரே நாடு ஒரே தேர்தல் விரைவில் வரும்.
தற்போது செந்தில்பாலாஜி 8 மாதங்கள் சிறையில் இருந்து அவருக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் போகிறது. இலாகா இல்லாத அமைச்சராக உள்ளார் இது ஒருபக்கம். பொன்முடி குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை, கைது மட்டுமே கால அவகாசம் கொடுத்துள்ளார்கள். சபாநாயகர் அவரது பதவி செல்லாது என சொல்லாமல் இருக்கிறார். திருக்கோவிலூர் தொகுதியிற்கு எம்எல்ஏ இல்லை என்பதை சபாநாயகர் சொல்ல வேண்டும். அதுவும் சொல்லவில்லை.
செந்தில் பாலாஜியை பொறுத்தவரை இலாகா இல்லாத அமைச்சராக மாதம் மாதம் சம்பளம் கொடுக்கிறார்கள். இது எப்படி நல்ல ஆட்சியின் அடையாளமாக எடுத்துக்கொள்வீர்கள். செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது ஊழலுக்கு அடித்தளம் ஆதரவும் கொடுக்க கூடிய செயலாக தான் பார்க்கின்றோம். திமுகவும், அதிமுகவும், பங்காளிகள் கட்சி, 5 வருடம் நான் விட்டுகொடுப்பேன், 5 வருடம் நீ விட்டுகொடுப்பேன் என இருக்கிறார்கள்.
உப்பு சப்பில்லாத காரணத்திற்கு என்னிடம் சண்டை வருகின்றார்கள். ஆனால் எம்.ஜி.ஆரை பற்றி பேசியதற்கு அதிமுவினர் கவலைபடமாட்டார்கள். ஆனால் தொண்டர்கள் கவலைபடுவார்கள். ஆனால் அவர்கள் பங்காளிகளாக சண்டை போடுவதாக நடித்துகொண்டிருக்கின்றார்கள். நாங்கள் டாஸ்மாகை மூட வேண்டும் கள்ளுகடை திறக்க வேண்டும் என இருக்கின்றோம்,
திமுக ஆலைகள் நடத்துவதற்காக இந்த விலையேற்றம், எங்களை பொறுத்தவரை விலையேற்றம், விலையிறக்கம் என்பதை விட டாஸ்மாக் மூடவிழா கள்ளு கடை திறப்பு விழா என்பதிலேயே தெளிவாக இருக்கின்றோம், என கூறினார்.