போன ஆட்சியில் செய்ததுல பாதி கூட இல்ல : இளைஞர்களை வஞ்சிக்கும் திறனற்ற திமுக அரசு : ஆதாரத்துடன் போட்டு தாக்கும் அண்ணாமலை

Author: Babu Lakshmanan
9 February 2023, 5:07 pm

சென்னை : வேலைவாய்ப்பு தொடர்பாக அளித்த வாக்குறுதியில், கடந்த ஆட்சியில் செய்த பாதியளவு கூட செய்யவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தததில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவர் கூறுவதுக்கு ஏற்றாற் போலவே, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

Annamalai - Updatenews360

அதேவேளையில், தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் அண்ணாமலை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் திமுக அரசு அக்கறை செலுத்தவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற தகவல்களுடன், அண்ணாமலை விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவோம் என்ற பொய்யை கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த காலங்களில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்களின் எண்ணிக்கையில் பாதியளவு கூட, கடந்த 2 ஆண்டுகளில் நடத்தவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலம் ஆகியுள்ளது.

CM Stalin - Updatenews360

சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பெரு நகரங்களில், 2018, 2019 ஆண்டை ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வேலைவாய்ப்பு முகாம்களைத்தான் நடத்தியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்காமல், தனியார் நிறுவனங்கள் வழங்கும் வாய்ப்புகளையும் தடுத்து, இளைஞர்களைத் தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கிறது திமுக.

உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலின் தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…