ஸ்டாலின் ‘நம்பர் ஒன்’ முதலமைச்சர் தான்.. அமைச்சர் முத்துச்சாமிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் ; அண்ணாமலை கிண்டல்…!!

Author: Babu Lakshmanan
16 August 2023, 12:05 pm

கன்னியாகுமரி ; படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்பது போல, இன்னைக்கு அமைச்சர் மனோதங்கராஜ் க்கு மலை முழுங்கி என்ற பெயரை வைக்கலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் என் மண் என் மக்கள் 17-வயது நாள் பிரச்சார நடைபயணத்தை மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதாவது:- கிள்ளியூர் பகுதியை சேர்ந்த ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளி சுரேந்திரன் மகள் அக்ஷய மகாலட்சுமி 12ம் வகுப்பில் 600க்கு 593 மதிப்பெண் பெற்று, நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 401 மதிப்பெண் பெற்று கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது, எனக் கூறினார்.

தொடர்ந்து, அந்த மாணவியை தனது பிரச்சார வாகனத்திலேயே அழைத்து பாராட்டியதோடு, இவரை பார்த்தாவது தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மாணவ, மாணவியருக்கு தன்னம்பிக்கை வரவேண்டும் என்று கூறினார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினமும் 600-லோடு கனிம வளம் கேரளாவிற்கு கடத்தப்படுவதாகவும், அமைச்சர் மனோதங்கராஜ் நினைத்தால் தடுக்க முடியாதா..? எனக் கேள்வி எழுப்பினார்.

படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில், இது யாருக்கு பொருந்தும் என்றால் திமுகவிற்கு. மனோதங்கராஜ் அண்ணனுக்கு ஒரு பெயரை வைக்க வேண்டுமென்றால் மலை முழுங்கி என்கின்ற பெயரை வைக்கலாம் எனவும் விமர்சித்தார்.

தொடர்ந்து, இரவிபுதூர் கடை பகுதியில் நேற்றைய பிரச்சார நடைபயணத்தை நிறைவு செய்தார். அப்போது, தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது :- பிரதமர் எங்கு சென்றாலும் தமிழ் மொழி, தமிழ் மொழி, தமிழ் தமிழ் என்று பேசி வருகிறார். எத்தனையோ அரசர்கள் செங்கோல் வைத்திருந்தாலும், பாராளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோலை வைத்திருக்கிறார். பிரதமர் தமிழகத்தை தூக்கிப்பிடிக்கிறார். திருக்குறளை 100 உலக மொழியில் மொழிபெயர்த்து கொடுக்க தரமணி செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு கூறியுள்ளார்.

ஆனால், இன்னைக்கு இருக்கக்கூடிய தமிழ் நாட்டின் அரசியல்வாதி ஸ்டாலின் அவர்கள், அந்த திருக்குறளை தப்பா படிச்சிருக்கிறார். திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார். நீரின்றி அமையாது உலகு என்று சொல்லி இருக்கிறார். “நீரின்றி அமையாது உலகு” என்பதை தவறாக புரிந்து கொண்ட அண்ணன் ஸ்டாலின் அவர்கள், “பீர் இன்றி அமையாது உலகு” என 27 மாதங்களாக அவருடைய சாதனை என்பது டாஸ்மாக்குகளை அதிகப்படுத்துவது என்பதுதான் அவரது சாதனை.

மது பிரியர்கள் தொல்லை கொடுப்பதாக தஞ்சை டாஸ்மாக் அருகில் உள்ள தாய்மார்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, 80 பெண்கள் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக்குக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீஸ் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காது. ஸ்டாலின் ஆட்சிக்கு வரும்போது நம்பர் ஒன் முதல்வர் என அவரே பட்டம் கொடுத்தார். சொன்ன மாதிரி ஆறு மாதத்தில் இரண்டு விஷயத்தில் நம்பர் ஒன் ஆக்கி வச்சிருக்கிறார். குடிப்பதிலே, கடன் வாங்குவதிலே..

அகில இந்திய அளவில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் நம்பர் ஒன் ஆக வந்துள்ளது. தமிழக அரசு மக்களின் பெயரில் கடன் வாங்கி உள்ளது. ஒரு குடும்பத்தின் தலையில் 3 லட்சத்த்து 52 ஆயிரம் கடன் உள்ளது. திமுக ஆட்சிக்கு வரும்போது 3வது கடன் மாநிலமாக இருந்தது. இப்போது, கஷ்டப்பட்டு முதல் இடத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் 18 முதல் 60 வயதில் உள்ளவர்கள் 19 சதவீதத்தினர் என ஆய்வு சொல்கிறது. உழைப்பவர்கள் செயலற்று கிடக்கிறார்கள். இதைத்தான் செந்தில்பாலாஜி வேண்டாம் என்ற இடத்தில் வந்த முத்துசாமி சொன்னார். காலையில் வேலைக்கு போகும் இருவர் பாதி கட்டிங்-க்காக காத்துக்கொண்டிருப்பார். இதனால் தமிழகத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி என்கிறார்.

பொருளாதாரத்தில் நோபல் பரிசு கொடுக்கணுமா..? கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? உலக அளவில் திராவிட மாடலுக்கும், பொருளாதாரத்திற்கும் நோபல் பரிசு வாங்கும் முழு தகுதி அமைச்சர் முத்துசாமிக்கு உள்ளது, என்றும் பேசினார்.

  • Divya Bharathi latest photoshoot கவர்ச்சியில் மின்னும் நடிகை திவ்ய பாரதி…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 387

    0

    0