பெரியார் கடைசி வரை மதிக்காத கட்சி திமுக… ஊழல் இல்லாத ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும் ; அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
17 October 2023, 12:45 pm

கோவை ; ஊழல் இல்லாத ஆட்சியை பாஜகவால் தான் தர முடியும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சியில் பா.ஜ.க,மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- கடந்த மாதம் 28 ம் தேதி மேட்டுப்பாளையம் வந்திருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் தள்ளி போய் இன்று (நேற்று) வந்துள்ளோம். தொண்டர்களிடம் கடுகளவு கூட உற்சாகம் குறையவில்லை. தமிழகத்தில் தாய்மார்களும், சகோதரிகளும் பிரதமர் மோடியின் பக்கம். பலரும் பெண் சுதந்திரம் பற்றி பேசுவார்கள், ஆனால் நாம் செய்து காட்டியுள்ளோம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலும், ஈரோட்டிலும் பெண்களை பா.ஜ.க மாவட்ட தலைவிகளாக நியமனம் செய்துள்ளோம். 1998ல் கோவை குண்டு வெடிப்பில், தீவிரவாத தாக்குதலில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 7 மனிதர்கள் உயிரை விட்டுள்ளனர். அவர்கள் இப்போது ஆண்மாக்களாக உள்ளனர். பிற இடங்களில் வேர்வை சிந்தி கட்சியை வளர்க்கிறோம் என்றால், மேட்டுப்பாளையத்தில் ரத்தத்தை சிந்தி கட்சியை வளர்க்கின்றோம்.

மேட்டுப்பாளையத்தில் இவ்வுளவு பெரிய கூட்டம் வந்துள்ளது. மக்களிடையே எழுச்சியை பார்க்க முடிகிறது. 2024ம் ஆண்டு 400 எம்.பி.கள் வெற்றி பெற்று பா.ஜ.க, வெற்றி பெற வேண்டும். மீண்டும் மோடி ஆட்சியை நாடாளுமன்றத்தில் அமர வைக்க வேண்டும். ஏழைகளின் நலன், இந்தியா உலக நாடுகளிடையே உண்மையான பொருளாதார இடத்தை பெற பா.ஜ.க, ஆட்சி மோடி தலைமையில் அமைய வேண்டும். இங்கே கூடியுள்ள கூட்டம் சாதாரண கூட்டம் இல்லை.

தொண்டர்கள் ரூ.1000 உழைத்தால் ரூ.500 கட்சிக்காக செலவு செய்கின்றனர். யாரிடமும் கமிஷனுக்காக கைக்கட்டி நிற்கவில்லை. ஊழல் இல்லாத ஆட்சி பா.ஜ.க,வால் தான் முடியும். தேர்தலுக்கு இன்னும் 7 மாதம் அதாவது 210 நாட்கள் தான் உள்ளது. இதே எழுச்சி இருக்க வேண்டும். தமிழகத்தில் 39க்கு 39 இடத்தையும் நாம் வெற்றி பெற வேண்டும்.

நீலகிரி தொகுதியில் ஊழல் வாதி ஏ. ராசா எம்.பி.யை அப்புறப்படுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. ஆ. ராசா ரூ. 1.70 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளார். மேட்டுப்பாளையம் சாதாரண ஊர் இல்லை. மேற்கு தொடர்சி மலை, ஊட்டிக்கு செல்லும் முக்கிய வழித்தடம், விவசாயம், நேர்மையான தேசிய சிந்தனை கொண்ட மக்கள், பட்டு சேலை என புகழ் பெற்ற ஊராகும்.

தமிழகத்தில் 2540 ஹெக்டர் கறிவேப்பிலை விவசாயம் செய்யப்படுகிறது. காரமடையில் தமிழகத்தின் பாதி கறிவேப்பிலை அதாவது 1240 ஹெக்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. காரமடையின் செங்காம்பு கறிவேப்பிலைக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் புவிசார் குறியீடு பெற அனுமதி கொடுக்க வேண்டும். கோவைக்கு ரூ.580 கோடியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

விமான நிலை விரிவாக்கம் ரூ. 2400 கோடியில் நடைபெற்று வருகிறது. பிரதமர் திட்டத்தில் 53 ஆயிரத்து 688 பேருக்கு இலவச வீடு வந்துள்ளது. குடிநீர் 66 சதவீதம் பேருக்கு குழாய் மூலம் வருகிறது. 66 ஆயிரத்து 839 விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் முத்ரா திட்டத்தில் 9 ஆயிரத்து 602 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

நாங்கள் இத்திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்போம். தலைவர்கள், தொண்டர்கள் மக்களிடம் சென்று ஓட்டு கேட்போம். தி.மு.க. என்ன சொல்லி ஓட்டு கேட்பீங்க. ரூ. 30 ஆயிரம் கோடி உதயநிதி சம்பாதித்துள்ளார். 35 அமைச்சர்களில் 11 அமைச்சர் மீது வழக்கு உள்ளது. அதே போல் திமுக அமைச்சரவையில் 2 பெண் அமைச்சர்கள் தான் உள்ளனர். ஆனால் மத்தியில் 68 அமைச்சர்களில், 11 பெண் அமைச்சர்கள் உள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல், வாழை ஆராய்ச்சி மையம், நெசவாளர்களுக்கு உதவி தொகை ரூ. 2 ஆயிராக உயர்த்துதல் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

மோடி தரும் அரிசியும், முட்டையும் நமக்கு முழுவதுமாக வரவில்லை. தனியார் மேகசின் வெளியிட்டுள்ள தரவரிசையில், உலகத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த இடத்தில் நம்பர் 1 எம்பி ராசா. இவரை தேர்தலில் தோற்கடிக்க பட வேண்டும். பெரியார் மதிக்காத கட்சி திமுக. இந்தி திணிப்பு டிராமா கட்சி திமுக. முதல் தலைமுறை கருணாநிதி, இரண்டாம் தலைமுறை மு.க. ஸ்டாலின், மூன்றாம் தலைமுறை உதயநிதி, நான்காம் தலைமுறை இன்பநிதி கட்சி திமுக, என தெரிவித்தார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!