விழுப்புரம் ; விழுப்புரம் மாவட்டம் மத்திய அரசின் திட்டத்தில் தான் தமிழக அரசு நடக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக முழுவதும் 122 மாவட்டங்களில் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் பாதயாத்திரை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்றது. அப்பொழுது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தாய்மார்கள், மகளிர்கள், இளைஞர்கள் என அனைவரும் சேர்ந்து தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது.
பெண்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவும் அடுத்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தமிழகத்தில் உள்ளனர். திமுக கட்சிக்காரர்கள் பாஜகவை பார்த்து ஹிந்தியை திணிப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், நம்முடைய பாரத பிரதமரோ, தமிழையும், திருக்குறளையும் தான் இந்தியா முழுவதும் திணித்து வருகிறார்.
நேற்று நடைபெற்ற காசி தமிழ் சங்கத்தில் திருக்குறள் புத்தகத்தை 16 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். மேலும், கடந்த ஆண்டு 13 மொழிகளில் மொழிபெயர்த்து மொத்தம் 29 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளார். மேலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் கடந்த 9 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நிதி ஒதுக்கி உள்ளார்.
ஆனால், தமிழக அமைச்சர்களோ, நிதியில் ஊழல் செய்கிறார்கள். குறிப்பாக, இந்த விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்ளார்கள். அதில் அமைச்சர் மஸ்தான் அவர்கள் வந்த பிறகு கள்ளச்சாராயம் சாவு அதிகரித்துள்ளது. மேலும், அமைச்சர் பொன்முடி வந்த பிறகு மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, என குற்றம் சாட்டினார்.
இந்நிகழ்வில் பாஜக மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் என ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.