பழைய செருப்பை மாட்டிக்கிட்டு அரசியல்… அது மட்டும் நடப்பது உறுதி ; CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை வார்னிங்!!

Author: Babu Lakshmanan
24 February 2024, 2:17 pm

இன்று ஜல்லிகட்டு நடைபெறுவதற்கு பிரதமர் மோடியை காரணம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் சக்குடியில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- இன்று தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது என்றால், அதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி காரணம். பிரதமர் மோடியை மதுரை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வருவது என்பது வேள்வி என்றும் அவரை அழைத்து வரும் வரை எங்களுக்கு ஓய்வு கிடையாது, எனக் கூறினார்.

பாஜகவின் அநீதிகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு, முதல்வர் பழைய செருப்பை போட்டுக்கொண்டு அரசியல் நடத்தணும்-னு நினைக்கிறார். அந்தப் பழைய செருப்பே அவரைக் கடிக்கத் தான் போகிறது. அவர் சொல்கின்ற பொய்களுக்கு எல்லாம் எங்களுக்கு வாக்குகள் சேர்ந்து கொண்டே தான் இருக்கும், என்றார்.

மேலும், திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மோடிக்கு வாக்களிக்க வேண்டும். நாங்களும் தெளிவாக இருக்கிறோம். தமிழக அரசை சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு 2024 ஒரு களமாக இருக்கும், என்றார்

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu