விஜயவாடாவில் துறைமுகம் மட்டுமல்ல கடலே இல்ல… அடிச்சுவிட்ட அமைச்சர் பொன்முடி ; அண்ணாமலை விமர்சனம் !!

Author: Babu Lakshmanan
2 September 2022, 6:08 pm
Quick Share

சென்னை : போதைப்பொருள் குறித்து அமைச்சர் பொன்முடி பொய்யான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில்‌ நாளுக்கு நாள்‌ போதையால்‌ ஏற்படும்‌ சமூக சீரழிவுகளை செய்திகளின்‌ வாயிலாக மக்கள்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. முன்பு, எப்போதும்‌ இல்லாத வகையில்‌ தமிழகத்தில்‌ போதை பொருட்களின்‌ புழக்கம்‌ உச்சத்தில்‌ இருக்கிறது என்பது ஆபரேஷன்‌ கஞ்சா 1.0, 2.0, 3.0 என்று நமது காவல்துறையினரின்‌ கண்துடைப்பு நடவடிக்கைகளால்‌ காணமுடிகிறது.

ஆகஸ்ட்‌ மாதம்‌ 11ஆம்‌ தேதி தமிழக முதல்வர்‌ திரு ஸ்டாலின்‌ அவர்கள்‌ போதை பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுத்தார். ‌ எடுத்த மூன்றாவது நாள்‌ தமிழகத்தில்‌ ஒரே நாளில்‌ 273.9 கோடி ரூபாய்க்கு மது விற்று புதியதோர்‌ சாதனையை செய்தது தமிழக அரசு.

போதையை ஒழிப்பதில்‌ தமிழக அரசின்‌ தீவிரத்தை மக்கள்‌ கண்டு மெய்சிலிர்த்து போன தருணம்‌ அது. தமிழகத்தின்‌ உயர்கல்வித்துறை அமைச்சர்‌ திரு பொன்முடி அவர்கள்‌, நடைபெற்று வரும்‌ இந்த திறனற்ற திமுக அரசின்‌ இயலாமையை மிண்டும் ஒரு முறை வெட்ட வெளிச்சமாக்கி விட்டார்‌. மது ஆலை நடத்தி வரும்‌. பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன் அவர்களையும்‌ உடன்‌ அமர்த்திக்கொண்டு, பத்திரிக்கையாளர்களை அமைச்சர் பொன்முடி அவர்கள்‌ சந்தித்திருந்தால், மேலும்‌ சிறப்பாக இருந்திருக்கும்‌.

17ஆம்‌ நூற்றாண்டு முதல்‌ இயங்கி வரும்‌ முந்த்ரா துறைமுகத்திலிருந்து தான்‌ இந்தியாவில்‌ அனைத்து இடங்களுக்கும்‌ போதை பொருள்‌ செல்கிறது என்பன போன்ற வாட்ஸ் அப்பில் வரும்‌ பொய்யான தகவல்களை ஒரு அமைச்சர் கூறுவது வேடிக்கை. அது மட்டும்‌ அல்லாது இந்த துறைமுகம்‌, கடந்த 8 ஆண்டுகளில்‌ தான்‌ தனியார்‌ மயமாக்குப்பட்டதை போன்றும்‌. பேசியுள்ளார்‌ அமைச்சர். 1998ஆம்‌ ஆண்டு முதல்‌ முந்த்ரா துறைமுகம்‌ தனியார்மயம்‌ ஆகிவிட்டது என்பது கூட அமைச்சருக்கு தெரியாதா?

இதற்கெல்லாம்‌ ஒருபடி மேலே சென்று விஜயடா துறைமுகத்திலிருத்து தமிழகத்திற்கு போதைப்‌ பொருட்கள்‌ கடத்தி வரப்படுகிறது என்பதை யாரோ, எழுதிக்‌ கொடுத்த துண்டு சீட்டிலிருந்து அமைச்சர்‌ படித்தார்‌. இதில்‌ கொடுமை என்னவென்றால்‌ விஜயவாடாவில்‌ துறைமுகம்‌, மட்டுமல்ல கடலே இல்லை என்பதே உண்மை. இப்படி வாட்ஸ் அப்பில் வதந்திகளை பத்திரிக்கையாளர்களிடம்‌ சொன்ன அமைச்சருக்கு ஒரே ஒரு கேள்வி.

1998ஆம்‌ ஆர்டு முதல்‌ தனியாரிடம்‌ இருக்கும்‌ முந்த்ரா துறைமுகம்‌ தான் தமிழகத்தின்‌ போதைப் பொருள்‌ புழக்கத்திற்கு காரணம்‌ என்றால்‌ 2021 மே மாதம்‌ வரை ஒன்‌ தமிழகத்தில்‌ பள்ளிக்கு செல்லும்‌ மாணவ மனைவியர்கள்‌ முதல்‌ அனைத்து மக்களும்‌ போதையில்‌ தள்ளாடிக்‌ கொண்டிருப்பது போன்ற காணொளிகளை நாம்‌ தினமும்‌ செய்திகளில்‌ பார்க்கவில்லை.

2021ஆம்‌ ஆண்டு மே மாதத்திற்கு பின்பு தமிழகம்‌ ஏன்‌ தலைகிழாக மாறியுள்து? துறைமுகங்கள்‌ தனியார்‌ மயமாக்கப்பட்டதினால்‌ தான்‌ போதை பொருட்கள்‌ இந்தியாவில்‌ நுழைகிறது என்பன போன்ற விசித்திரமான சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்‌. அமைச்சர்‌ பொன்முடி அவர்கள்‌.

2020ஆம்‌ ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்தில்‌ கமசர்‌ 115 கிலோ ஹெராயின்‌ மற்றும்‌ ATS எனப்படும்‌ போதை பொருள்‌ தேசிய போதை பொருள்‌ தடுப்பு பிரிவினால்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டது. தூத்துக்குடி துறைமுகம்‌ தனியார் துறைமுகமா? 2001ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ மாநம்‌ வரையில்‌ மட்டும்‌ தமிழகத்தில்‌ 1239.54 கிலோ போதைப்‌ பொருட்களை போதைப் பொருள்‌ தடுப்பு பிரிவு பறிமுதல்‌ செய்தது அமைச்சருக்கு தெரியாதா?

2021ஆம்‌ ஆண்டு டிசம்பர் மாதம்‌ 71 கிலோ ஹெராயின்‌ நூத்துக்குடியில்‌ பிடிபட்ட செய்தியை அமைச்சர்‌ மறந்துவிட்டாரா..? திமுகவினரை சமூக வலைத்தளங்களில்‌ பரப்பும்‌ பொய்களை எல்லாம், தொகுத்து அமைச்சர் வாசித்ததை போல்‌ இருந்தது அவரது செய்தியாளர் சந்திப்பு. தமது அரசியலமைப்பு சட்டத்தின்படி காவல்‌ துறை மாநில பட்டியலில்‌ உள்ளது 12 மணிக்கு முன்னால்‌ டாஸ்மாக்‌ கடைகள்‌ திறக்கப்பட கூடாது என்று சட்டம்‌ இருந்தும்‌ அதை கூட சுவர கண்காணிக்காமல் உறங்கிக்‌ கொண்டிருக்கிறது. திமுக அரசு.

நீங்கள்‌ எப்படி போதைப் பொருட்களின்‌ புழக்கத்தை கட்டுப்படுத்துவீர்கள்‌?, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 586

    0

    0