அந்த வார்த்தை சொல்லலாமா…? எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாங்க ; திமுக எம்பி தயாநிதி மாறனை விளாசிய அண்ணாமலை…!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
1 January 2024, 3:35 pm

முடி திருத்துபவர்களை அவமதிக்கும் விதமாக பாஜகவினரை விமர்சிப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும், திமுக எம்பியுமான தயாநிதி மாறன், அண்மையில் வட இந்திய மக்கள் குறித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியில் கூட கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில், திமுக எம்பி தயாநிதி மாறனின் தற்போதைய பேச்சு மீண்டும் சர்ச்சையான நிலையில், அவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தயாநிதி மாறன் பேசிய சர்ச்சைக்குள்ளான பழைய வீடியோவை பாஜகவினர் மீண்டும் சமூகவலைதளங்களில் டிரெண்டாக்கி வருவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “வேலையில்லாத முடி திருத்துபவர் பூனையை பிடித்து சிரைப்பார் என்று ஒரு பழமொழி உள்ளது. அதுபோல பாஜக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்கள் எங்கள் மீது ஏதாவது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அதுவும் தேசிய அளவில் உள்ள பாஜக ஐடி விங் நிர்வாகிகள், ஏதோ ஒரு பிரச்னையை உருவாக்கி அதனை பூதாகரப்படுத்தி பலன்பெறலாம் என நினைக்கிறார்கள். அது எடுபடாது”, எனக் கூறினார்.

இந்த வீடியோவை பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, “தொழில் அல்லது மொழியால் ஒருவரை இழிவுபடுத்துவது மட்டுமே திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு கைவந்த கலை. தயாநிதி மாறன் மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக, நமது வட இந்திய சகோதர சகோதரிகளை இழிவாக பேசிய வீடியோவை பரப்புபவர்களையும் அதுகுறித்து கருத்து தெரிவிப்பவர்களையும் வேலையில்லா முடிதிருத்துநர் என்று வசைபாடுகிறார்.

இதுபோன்ற பேச்சுகள் மூலம் தேர்தல் தோல்வியை கொடுத்தாலும், இண்டியா கூட்டணியில் உள்ள தலைவர்களின் உறுதியை அசைப்பதாகத் தெரியவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்