வெங்காயத்தின் தோல் வேகமாக உரிக்கப்படுகிறது.. பிரதமர் குறித்து விமர்சனம்.. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை பதிலடி!!

Author: Babu Lakshmanan
29 May 2023, 12:46 pm

பிரதமர் மோடியின் புகைப்படத்தை கடுமையாக விமர்சித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார். இதையொட்டி, காந்தி சிலை அருகே நேற்று காலை 7 மணியில் இருந்தே ஆதினங்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். அனைத்து மதப் பிரார்த்தனைகளும் மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட வேத மந்திரங்கள் முழங்கின. மக்களவை சபாநாயகர் இருக்கும் அருகே பாரம்பரியமிக்க தமிழ்நாட்டின் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்ட செங்கோலை நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாட்டின் திருவாடுதுறை ஆதினம் அம்பலமான தேசிக பரமாச்சாரியார் தலைமையில் 21 ஆதீனங்கள் அணிவகுத்து பிரதமர் மோடிக்கு ஆசி வழங்கி அந்த செங்கோலை அவரிடம் கொடுத்தனர். பின்னர் அந்த செங்கோலைப் பிரதமர் மோடி ஊர்வலமாக எடுத்துச் சென்று மக்களவை சபாநாயகர் இருக்கையின் வலது புறம் உள்ள கண்ணாடி பெட்டியில் நிறுவி தரையில் விழுந்து வணங்கினார்.

பிரதமர் தரையில் விழுந்து வணங்கிய புகைப்படத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ‘மூச்சு இருக்கா?? மானம் ?? ரோஷம் ??’ எனப் பதிவிட்டு இருந்தார். அமைச்சரின் இந்த செயலுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ‘திராவிட அரசியலின் அடித்தளமே அவதூறும், துஷ்பிரயோகமும் தான். உங்கள் கட்சியின் சித்தாந்தத்தை போலவே உங்களின் (அமைச்சர் மனோ தங்கராஜ்) எண்ணங்களும் மிகவும் மோசமானவை. இந்த மண்ணின் கலாச்சாரத்தின் மீதான உங்கள் வெறுப்புக்கு முடிவே இல்லை. எதிர்பார்த்ததை விட வெங்காயத்தின் தோல் வேகமாக உரிக்கப்படுகிறது,’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, அமைச்சர் மனோ தங்கராஜின் பதிவை விமர்சித்து தமிழ்நாடு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில், அடேய் பொறுக்கி மனோ தங்கராஜ் ஒழுங்கா நாளைக்கு அறிவாலயத்தில் போய் ஒளிஞ்சிக்க எனக் குறிப்பிட்டிருந்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 473

    0

    0