தவறு நடப்பதை வெளியே சொல்லும் உணவக உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை அமைச்சர் சிவசங்கர் அழிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள உணவகங்களில், அரசுப் பேருந்துகள் நிறுத்திச் செல்வது தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற வேண்டிய ஒப்பந்தம், இன்று வரையில் நடைபெறாமல் இருப்பதால், பெரும் முதலீடு செய்துள்ள நெடுஞ்சாலை உணவகம் நடத்துபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும், அவரது உதவியாளர்களும், பல உணவக உரிமையாளர்களிடம் லஞ்சம் வசூலித்து, அவர்கள் உணவகங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்துவதற்கு வசதியாக, இந்த ஒப்பந்தங்களை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்று தெரிய வருகிறது.
இதன் மூலம், இத்தனை ஆண்டுகளாக நெடுஞ்சாலைகளில் உணவகம் நடத்தி வந்தவர்களும், அதனைச் சார்ந்த தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தொடர்ந்து பலமுறை அமைச்சரையும், அதிகாரிகளையும் தொடர்பு கொண்டும், எந்த நடவடிக்கையும் இல்லாததால், ஒரு ஊடகவியலாளர் வாயிலாக, இந்தப் பிரச்சினையை மக்கள் மத்தியில் உணவக உரிமையாளர்கள் எழுப்பியிருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அந்த உணவகங்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளார். இரண்டு உணவகங்களின் உரிமங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
லஞ்சம் வாங்கிய உதவியாளர்கள் மீதும், ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் தள்ளிப் போடும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்காமல், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, மக்கள் மத்தியில் பிரச்சினைகளைக் கொண்டு வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் அமைச்சரின் இந்த முடிவு, ‘அமைச்சர் உள்ளிட்டோர் தவறு செய்தால், கண்டும் காணாமல் இருக்க வேண்டும், அவற்றைப் பொதுவெளியில் சொன்னால், புகார் கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் வாழ்வாதாரத்தைப் பறிப்போம்’ என்று, அனைவருக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே தெரிகிறது.
ஏற்கனவே ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர், இன்னும் எத்தனை பேர் வாழ்வாதாரத்தைப் பறிக்க முடிவு செய்துள்ளார்? அதிகாரத் திமிரில் ஆடிய அமைச்சர்கள் பலர் இன்று இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார்கள் என்பதை அமைச்சர் உணர்ந்தால் நலம், என தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
This website uses cookies.