ஒரு புகாருக்கே பயந்துட்டாரு சீமான்… திமுகவின் B டீம் என சொல்லிட்டு போகலாம் ; அண்ணாமலை கடுமையாக சாடல்..!
Author: Babu Lakshmanan4 September 2023, 7:12 pm
ஒரு பெண் ஒரு வழக்கு கொடுத்ததுக்கு பின் சீமான் பயந்துவிட்டார் என்பதை இப்போதுதான் பார்க்கின்றேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரையை பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாம் கட்டமாக இன்று தென்காசியில் இருந்து மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வருகை தந்தார்.
அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெல்லையில் இளைஞரணி செயலாளர் ஜெகன் வெட்டி படுகொலை செய்யப்பட்டர். மேலும், நேற்று திருப்பூரில் உள்ள பல்லடத்தில் பாஜகவை சேர்ந்த மோகன் என்ற கிளை தலைவர் அவரது தம்பி, அம்மா, சித்தி ஆகிய 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு எங்கே போகின்றது. கொங்கு வரலாற்றில் இதைப் போன்ற அரிவாள் வெட்டு சம்பவத்தை யாரும் பார்த்தது கிடையாது.
தமிழகம் முழுவதும் குடிகார நாடாக மாறி இருக்கிறது. வெட்கி தலைக்குனிவு, தமிழகம் வன்முறை கலாச்சார மாநிலமாக இருக்கிறது. இதற்கு அடிப்படை குடி, இதனால் எல்லோரும் அருவாள் தூக்கி இருக்கிறார்கள். மாநில அரசு கவனத்தில் கொண்டுவர வேண்டும். இனியாவது திமுக தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டு குடியில் இருந்து விடுதலை கொடுக்க வேண்டும்.
சபாநாயகர் முன்பு ஒரு பெண் கந்து வட்டி கொடுமையால் தீக்குளிப்பதற்கு முயற்சி எடுத்து இருக்கின்றார். இதையெல்லாம் தமிழகத்தில் பேச வேண்டி உள்ளது. தற்போது சமூக நீதி, ஜாதி சனாதான தர்மம் பேசுகின்றீர்களே, இத்தனை வருடமாக கட்சி சும்மா நடத்தினீர்களா?. நேரு பேசும் போது தம்பிகளா, நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும். என்கிறார். அப்போது குற்றம் உள்ள நெஞ்சு கூறுகுருக்கிறது, எனக் கூறினார்.
தொடர்ந்து, சீமான் பற்றி அவர் பேசியதாவது:- ஒரு பெண் ஒரு வழக்கு கொடுத்ததுக்கு பின் சீமான் பயந்துவிட்டார் என்பதை இப்போதுதான் பார்க்கின்றேன். அவரிடம் பிடித்தது தைரியம் தான், ஒரு கம்ப்ளைன்ட் பயந்து நாங்களும் திராவிட கட்சிகளும் பங்காளி என்கின்றனர். போன வாரம் வரைக்கும் வேற ஒரு விஷயமா இப்போது 2.0 சீமான் ராமநாதபுரத்தில் திமுக நிற்கவில்லை என்றால் இவர் நிற்பாராம். திமுக பி கட்சி என்று நாம் தமிழர் சொல்லிக் கொள்ள வேண்டியதுதானே, ஒரு மனிதனை ஒரு கம்ப்ளைன்ட் எந்த அளவுக்கு மாற்றி இருக்கிறது என்று பாருங்கள். சீமான் இந்த அளவுக்கு பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
தானே இவர்களாகவே ஒரு யூகம் பிரதமர் ராமநாதபுரம் வருவார் என்று அவர்கள் நேற்று பேசியது அவர் மீது வைத்திருக்கின்ற மரியாதை பெருமளவு குறைந்திருக்கிறது. தைரியமாக பேசக்கூடியவர் என்று நினைத்தேன். ஆனால் ஒரு கம்ப்ளைன்ட் சீமான் திமுகவை சார்ந்து பேசுவார் என்றும், திமுகவை பங்காளி என்று கூறுவார் என்றும் நினைத்து பார்க்கவில்லை, என்றார்.