அடுத்த 3 வாரத்தில் ஆட்டம் காணப்போகும் திமுக… அமைச்சர் உதயநிதிக்கு பதிலடி கொடுத்து தேதியை குறித்த அண்ணாமலை…!!

Author: Babu Lakshmanan
19 January 2024, 9:26 am

கண் தொடைப்புக்காக நடத்தப்பட்ட நாடகம் 2ஜி வழக்கு என்றும், ஆடியோ டேப்புக்கு திமுகவினர் பதில் சொல்ல வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது :- கோவையில் வழக்கமாக நடைபெறும் கூட்டம் தான் நடந்தது. திமுகவின் பல்லாவரம் தொகுதி எம்.எல். ஏ., மகனின் வீட்டில் பணிபுரிந்த வீட்டு பணிப்பெண், பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். சமூக நீதி பேசும் திமுகவின் ஆட்சியில் உள்ள எம்.எல்.ஏ., மகன் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் அளித்தும் இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை.

பிரதமர் தமிழகத்திற்கு ஒரே மாதத்தில் 2வது முறையாக வருகிறார். ஜனவரி 22 ஆம் தேதி அயோத்திக்கு ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார். 11 நாள் சிறப்பு வழிபாடாக ராமருக்கு தொடர்புடைய இடங்களுக்கு செல்கிறார். அதன்படி, பிரதமர் ஶ்ரீ ரங்கம் செல்கிறார். பின், ராமேஸ்வரம் செல்கிறார்.

அயோத்தியா செல்வதற்கு முன் தமிழகம் வந்து ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம், கோதாண்டாரமன் சுவாமியை சந்தித்து செல்கிறார். இதன்மூலம், தமிழகம் மீது பிரதமரின் அன்பை பார்க்க முடிகிறது. அதனால், வாழ்த்தி வழியனுப்ப தயாராக உள்ளனர். அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுக்கின்றனர். உத்தரப்பிரதேசம் 3 நாட்களாக விழா, விடுமுறை என அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுத்துள்ளது. தமிழகத்திற்கு மிகப்பெரிய பாரம்பரியம் ராமருக்கு தொடர்பு உள்ளது. ராமருடைய பிறப்பிடமாக உள்ளது.

விடுமுறை இல்லையென்றாலும் மக்கள் கொண்டாட வேண்டும். இதைப்பற்றி கருத்து சொல்ல உதயநிதிக்கு தகுதியில்லை. பரிசு கொடுப்பது ராமாயணம், ஆனால் ராமர் கோவில் பற்றி பேசுகின்றனர். இடிப்பது பற்றி பேச உதயநிதிக்கு, திமுகவிற்கு தகுதியில்லை. உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி வழிகாட்டுதலின்படி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.

முதல் பத்திரிக்கையை அங்குள்ள இஸ்லாமியருக்கு தான் வழங்கப்பட்டது. உதயநிதி வரலாற்றை அப்டேட் செய்து கொள்ளும். ஆளுநர் என்பது மாநில அரசு சொல்வதெல்லாம் ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்க முடியாது. அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்பாடு வேண்டுமே என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. வரம்பு மீறி செயல்பட்டதாக சொல்லவில்லை.

முதல்வர் கண்ணாடி முன் நின்று அவர்கள் மீதுள்ள தவறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கண் தொடைப்புக்காக நடத்தப்பட்ட நாடகம் 2ஜி வழக்கு. டேப்க்கு திமுகவினர் பதில் சொல்ல வேண்டும். அப்போதைய யு.பி.ஏ., கூட்டணி, இப்போது இந்தியா கூட்டணியாக உள்ளது.

தன்னிடம் கொடுக்கப்பட்ட மனுக்களில் 30% நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது, 70% நிவர்த்தி செய்யவில்லை, 17% மத்திய அரசு சார்ந்தது, 83% மாநில அரசு சார்ந்தது என்பதால் நிவர்த்தி செய்வதில் தாமதமாகிறது. பதவி ஆசை இருப்பவர்கள், குற்றம் சொல்ல அவர்களுக்கு (அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்) தகுதியில்லை. நாங்கள் கொள்கைக்காக இருக்கிறோம். பதவிக்காக இல்லை.

15-20 பேர் இங்கு தலைவர்கள் நாற்காலிக்காக உள்ளனர். மற்ற கட்சிகள் ஒருவர் தான் தலைவர் பொறுப்புக்கு உள்ளனர். தைரியத்துடன் சொல்வது தான் பாஜக. மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். 1 கோடி தொண்டர்கள் இருப்பதாக சொல்கிறீர்கள். பாஜகவால் இயற்கையாக வளர்வதால் தான் சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் அடுத்த தலைமுறை வந்துள்ளது.

குடும்பத்தில் பிறந்தால் தான் தலைவன் என்பது திமுக. அவர்களுக்கு பாஜகவை பற்றி புரியாது. பிரதமர் மோடி தான் மீண்டும் வருவார். மக்கள் மத்தியில் பெரிய அலைகள் ஏற்படும். 38 மாதம் ஆட்சியில் இருந்துக்கொண்டு இதை செய்ததாக சொல்வதற்கு தைரியம் இல்லை. எத்தனை முறை மத்தியில் இருந்துள்ளனர், அப்போது மாநில உரிமையை பற்றி பேசி உள்ளனரா? அடுத்த 3 வாரங்களில் அனைத்து டேப்பும் வெளியிடப்படும், எனக் கூறினார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 309

    0

    0