கச்சத்தீவை மீட்பதற்கு நெய்தல் படை அனுப்பவும், கப்பற்படை அனுப்பவும் என்றெல்லாம் நாங்கள் கூறவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை இன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சின்ன தடாகம் பகுதியில் பிரச்சாரம் முடித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, பேசிய அவர், கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்டிஐ பொய் சொல்கிறது என சொல்பவர்கள் விவாதம் செய்ய தயாரா..? என கேள்வி எழுப்பினார். 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் சென்று இருப்பது எனவும், ஆனால் இன்று தான் சில நபர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயத்தை வெளியே கொண்டு வந்துள்ளோம் எனவும் கூறினார்.
கச்சத்தீவு ஒப்பந்தமே இந்திரா காந்தி, ஒரு அமைச்சர் மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என கூறிய அண்ணாமலை, கச்சத்தீவை நாம் கொடுத்த போதும், இந்திய மீனவர்கள் அதனை பயன்படுத்தலாம் என ஒப்பந்தம் இருந்தது. அப்போதும் இந்திய எல்லை என்பது கச்சத்தீவு வரை இருந்தது. அதையும் ஆர்டிகள் 6 வைத்து எடுத்து விட்டனர் என சாடினார்.
மேலும் படிக்க: கச்சத்தீவு பற்றி பேச தகுதியில்ல.. மோடி ஆட்சியால் 2 பேர் நல்லா இருக்காங்க.. லிஸ்ட் வெளியிட்ட சி.வி சண்முகம்!
கச்சத்தீவு நமக்கு வேண்டும் என்பதே எங்களது அதிகாரப்பூர்வ நிலைப்பாடு எனவும், இந்திய பரப்பில் அந்த சில கிலோமீட்டர்கள் தான் தீர்வை கொடுக்குமா என்றால் அப்படி கிடையாது. தமிழக மீனவர்கள் பிரச்சனை அப்போதுதான் தீர்க்க முடியும். இல்லையென்றால் முடியாது, என தெரிவித்தார்.
கச்சத்தீவை மீட்பதற்கு நெய்தல் படை அனுப்பவும், கப்பற்படை அனுப்பவும் என்றெல்லாம் நாங்கள் கூறவில்லை எனவும், அறிவியல் பூர்வமாக தொழில்நுட்ப ரீதியில் எப்படி பெற முடியும் என பார்ப்பதாகவும் தெரிவித்தார். இத்தனை ஆண்டுகளாக சுப்பிரமணியன் சாமி போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, 50 ஆண்டுகளுக்குப் பிறகு இதை வெளியே கொண்டு வந்துள்ளதாகவும், இவ்வளவு காலம் அவர்கள் ஏன் ஆர்டிஐ போடவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
சீமானுக்கு சின்னமும் இல்லை, ஓட்டும் இல்லை என்பதால் அண்ணாமலை மீது உட்கார்ந்து விட்டார் என கூறினார். இளைஞர்கள், மகளிர் யார் பக்கம் வருகிறார்கள் என தெரியும். சீமான் அண்ணனை பொருத்தவரை இப்படித்தான் பேசுவார்கள். யாரும் கண்டு கொள்ளாதீர்கள் எனவும் கூறினார்.
அந்தோதியா யோஜனா திட்டத்தின் கீழ் நாம் கொடுக்கும் 35 கிலோ அரிசியை ஆஃப் டேக் வேல்யூவை நாம் குறைக்கவில்லை எனக் கூறிய அவர், காவிரியில் தண்ணீர் குறைந்த பிறகு டெல்டா பகுதியில் கால் லட்சம் டன்னில் இருந்து ஐந்தே கால் லட்சம் டண்ணுக்கு வந்திருக்கிறது எனவும், இந்தி கூட்டணி செய்த காமெடியால் மகசூல் குறைந்து இருப்பதாகவும் விமர்சித்தார்.
மேலும் படிக்க: 5 வருஷமா ஒன்னுமே பு•••ல…. அப்பா சொத்தை உட்கார்ந்து சாப்பிடுறாரு… திமுக எம்பியை கிழிகிழியென கிழித்த மன்சூர் அலிகான்..!!
கள்ளு கடை திறக்க வேண்டும் என வெள்ளை அறிக்கை ஆளுநரிடம் கொடுத்துள்ளதாகவும், கள்ளுக்கடைகளை திறப்போம் என்பதில் உறுதியாகவும், உறக்கமாகவும் சொல்வோம் எனவும் மக்களை குடிக்காதீர்கள் என சொல்லப் போவதில்லை எனவும் தெரிவித்தார். மேலும், டாஸ்மாக்கை மூட வேண்டும், கள்ளு கடையை திறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி பேசவே இல்லை என யாரும் கூறவில்லை எனவும், ஆவணங்கள் யார் கொடுத்தார்கள் என தான் கேட்கிறார்கள் எனவும், இதிலிருந்து திமுக பச்சை பொய் பேசுகிறது என தெரியவில்லையா..? எனவும் கேள்வி எழுப்பினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.