NDA கூட்டணியில் OPS-க்கு ‘குட்-பை’-யா..? நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா…? வெளிப்படையாக சொன்ன அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
2 August 2023, 4:24 pm

புதுக்கோட்டை : ஊழலை பற்றி பேசாமல் என்னோட அறிக்கையில் FULL STOP இருக்கிறதா..? இல்லையா..? என்று பார்ப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை லெம்பலக்குடியில் செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது :- பாஜகவை பொறுத்தவரை இந்த யாத்திரை மக்களை சந்திக்க ஒரு வாய்ப்பு. சாமானிய மக்களும் இந்த சந்திப்பில் இடம் பெற்று நாம் சொல்லும் கருத்துக்களை ஏற்றுகிறார்கள். இந்த 9 ஆண்டுகள் பிரதமர் மோடி மாற்றத்தை தந்துள்ளார் என்றும் எண்ணுகிறார்கள். இந்த யாத்திரை மூலம் இது நல்லதொரு மாற்றம் வரும் என்பது எங்களது நோக்கம்.

விமர்சனங்கள் வைக்க வைக்க நாம் செய்யக்கூடிய வேலை சரி என்று நமக்கு தோன்றும். யாத்திரை மக்களை சென்றடைகிறது. யாத்திரைக்கான நோக்கம் நிறைவேறுகிறது என்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் நமக்கு காட்டும். எங்களைப் பொறுத்தவரை இருப்பதை இருப்பதாகவும், செய்ததை சொல்கின்றோம். நாங்கள் சொல்வது பொய் கிடையாது.

மோடி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல், திமுக ஆட்சியில் அவர்கள் செய்யும் குற்றங்களை ஆதாரத்துடன் தந்து வருகின்றோம். எதையும் பேச வேண்டும் என்பதற்காக பேசாமல், செஞ்ச வேலையை மக்களிடம் சொல்லி மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக ஆதரவு கரம் நீட்ட கேட்டுக் கொண்டு வருகின்றோம்.

யாத்திரையில் தொடக்க நாளில் நாம் இருக்கின்றோம். இந்த யாத்திரையை பொறுத்தவரை வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தமிழ்நாட்டில் வெல்ல வேண்டும் என்பதை. இன்று எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டை வைக்கலாம். ஆனால், இந்த யாத்திரை முடியும்போது தெரியும். அதிமுகவில் உள்ள யாரையும் நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால், அதிமுகவை பொறுத்தவரை யாரை அங்கீகரிக்க வேண்டும். யாரை கூப்பிட வேண்டும் என்று முடிவு செய்து கூட்டணி கட்சி கூட்டத்திற்கு அழைக்கின்றனர். நாங்கள் யாரையும் வெறுக்கவில்லை.

ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் விரக்தி ஆக இல்லை. ஓபிஎஸ் போன்றவர்கள் மிகப் பெரிய தலைவர்கள். தமிழ்நாட்டில் மக்களுக்காக அரும்பாடும் பட்டவர்கள். முதலமைச்சராக இருந்தவர், வேறு வேறு பொறுப்புகளில் மக்கள் பணி செய்தவர். தமிழ்நாட்டு மக்களுக்கு பணி செய்து வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை. இவர்கள் தவறானவர்கள் என்று சொல்லவில்லை. பாஜக தனது வேலையை செய்கிறது. அதிமுகவோடு, அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் உள்ளது. கூட்டணி கட்சி கூட்டத்திற்கும் அழைப்புகள் விடுக்கப்பட்ட உள்ளது. அதனால் இதில் யாருக்கும் வருத்தம் கிடையாது.

திமுகவின் ஊழல் பட்டியலில் முதல் பட்டியல் மக்களுக்கு இது போல் நடைபெறுகிறது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வெளியிடப்பட்டது. இரண்டாவதாக வெளியிடப்பட்ட பட்டியல் நடவடிக்கைக்காக வெளியிடப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுக்கப்பட்ட புகார்கள் எதற்கும் நடவடிக்கை எடுக்காததால், தற்பொழுது இந்த பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்.

சீமானை பொறுத்தவரை பிரதமர் என்றால் பணம் கொடுத்து ஓட்டுக்களை வாங்க வேண்டும். ஊழல் செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால், பிரதமர் மோடி ஒன்பது ஆண்டு காலமாக கடுகளவும் ஊழல் செய்யாதவர். இந்தியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று இந்தியா அமைதியாக உள்ளது. 2014 இல் சீமான் உட்பட சராசரி இந்தியனின் ஆண்டு வருமானம் 86 ஆயிரம் ரூபாய் இருந்தது, இன்று ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது.

பொருளாதார நாடுகளில் இன்று ஐந்தாவது இடத்தில் உள்ளோம். இதையெல்லாம் புரிந்து பேச வேண்டும். பத்தாம் பொதுவாக மைக்கில் பேசுவதை விட, புரிந்து தரவின் அடிப்படையில் பேச வேண்டும். ஆதாரத்தின் அடிப்படையில் பேச வேண்டும். இந்தியாவிலேயே இதுவரை நடந்த ஆட்சியில் சிறந்த ஆட்சியாக யாருடனும் ஒப்பிட முடியாத ஆட்சியாக பிரதமர் மோடியின் ஆட்சி உள்ளது. எல்லா விதத்திலும் எல்லாருக்கும்மான ஆட்சியாக உள்ளது. இதனை புரிந்து கொள்வார்கள். அரசியலில் சித்தாந்தத்தின் அடிப்படையில் எதிர்ப்பது வேறு, பொய்யின் அடிப்படையில் எதிர்ப்பது தவறு. 2019-ல் அதைத்தான் இங்கு செய்தார்கள். ஆனால் இம்முறை மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

மற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. இன்று தமிழ்நாட்டில் ஊழலை எதிர்த்து பேசக்கூடிய கட்சி பாஜக தான். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் தவறை சுட்டிக்காட்டுவது பாஜக தான். வேறு யாருடையாவது பட்டியலை வெளியிட வேண்டுமென்றால், சொல்பவர்கள் தைரியமாக வெளியிடட்டும் எல்லாத்தையும். ஏன் அண்ணாமலை மீது வேறு கட்சியினர் தோள் மீது ஏறி சவாரி செய்ய வேண்டுமா…? அவர் அவர்களுக்கென்று தனித்தனி கட்சி உள்ளது. சித்தாந்தம் உள்ளது. அவரவர்கள் அவர்களுடன் கட்சியை நடத்த வேண்டும்.

நம்மைப் பொறுத்தவரை அமித்ஷா சொன்னதை போல இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஊழல் செய்யக்கூடிய அரசாங்கமாக இருப்பது திமுக தான். அதைத்தான் மக்கள் மன்றத்தில் வைக்கின்றோம், நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அரசுக்கு சாராத EDயும் (அமலாக்கத்துறையும்), சிபிஐயும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதை யாரும் தமிழ்நாட்டில் பேச மறுக்கிறார்கள். அதை விடுத்து அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டில் கமா உள்ளதா..? ஃபுல் ஸ்டாப் உள்ளதா..? என்று விவாதம் செய்வதை தவிர்த்து குற்றச்சாட்டுகளை பார்க்க வேண்டும்.

ED-யும், சிபிஐ பொறுத்தவரை தன்னாட்சியாக செயல்பட கூடிய அமைப்புகள். அவர்கள் முறையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் யாராக இருந்தாலும் ஒரு அமைப்பின் மீது என் கண் வைத்துள்ளது, அப்படி ஏதேனும் செய்ய நினைத்தாலும் கூட எந்த வழக்கையும் மூட முடியாது. எல்லா வழக்கையும் நீதிமன்றம் கண்கொத்தி பாம்பாக பார்த்து வருகிறது. EDயை பொறுத்தவரை எடுக்கக்கூடிய நடவடிக்கை எல்லாமே நடுநிலையாக உள்ளது. ஆனால், இதில் போலியானவர்கள், ஊழல் அடிப்படையில் வைத்து அரசியல் நடத்துபவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தவுடன் EDயின் மீது குறை சொல்கிறார்கள். இதுதான் நடக்கக்கூடிய தவறான விஷயம்.

எம்பி கார்த்தி சிதம்பரம் மீது ED வழக்கு உள்ளதால் ED தேவை இல்லை என்று தான் கூறுவார். ஏனென்றால் மூன்றாவது சோதனை வந்துவிடும் என்று. கார்த்தி சிதம்பரத்தின் குடும்பமே ஊழல் செய்துள்ளது. அதனால் ED வேண்டாம் என்றுதான் கூறுவார். ஊழல் செய்து ED இடம் மாட்டிக்கொண்டவர்கள் ED வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். கார்த்தி சிதம்பரம் கூறுவதை பொறுத்தவரை அவருக்கு சரிதான், இப்படியாவது ED வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என்று பார்க்கிறார்.

கொடநாடு வழக்கை பொறுத்தவரை அரசு இருக்கிறது. காவல்துறை உள்ளது, எஸ்பி இருக்கிறார்கள். இந்த வழக்கை நடுநிலைமையாக நடத்த வேண்டும், யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடநாடு வழக்கு மட்டும் இன்றி எந்த ஒரு சென்சிடிவ் வழக்காக இருந்தாலும், குற்றவாளிகள் கண்டறிந்து கைது செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கண்டறிய வேண்டும்.

கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம். கூட்டணியில் வருபவர்கள் பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு ஒற்றுமையாக இருப்பதை பற்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக யார் வருகின்றார்களோ, வரட்டும். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை கதவுகள் திறந்து தான் இருக்கிறது.

நான் எந்த இடத்திலும் போட்டியிடவில்லை. பாதயாத்திரை முடித்துவிட்டு கட்சிப் பணியை செய்யத்தான் நேரம் இருக்கிறது. என் வேலை கட்சியை வளர்ப்பது, கட்சி வேலை செய்வது, எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 404

    0

    0