முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட திமுக பிரமுகர்கள் 17 பேரின் முதற்கட்ட சொத்துப்பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிடுகிறார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியை மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் வருகின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல் மற்றும் தமிழக மின்வாரியத்தில் முறைகேடாக கோபாலபுரத்திற்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர் வழங்கப்படுவதாக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் துபாய் பயணத்தை விமர்சித்த அண்ணாமலை, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குதில் ஆவின் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்காமல் தனியார் துறைக்கு டெண்டர் வழங்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுநர் ஆர்என் ரவியிடம் கொடுத்தார்.
அதன்பின்னரும், அடுத்தடுத்து திமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்களை அண்ணாமலையும், பாஜகவினரும் கூறி வருகின்றனர். இதனிடையே, கடந்த மாதம் தென்காசியில் பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது,
“தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என்றும, இதனை வெளியிடும்போது, தமிழக மக்கள் இன்னும் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்றும் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும அவரது குடும்பத்தினர் என மொத்தம் 17 திமுக பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை முதற்கட்டமாக இன்று வெளியிடுவதாக நேற்று டுவிட்டரில் அண்ணாமலை அறிவித்திருந்தார். இது தமிழகத்தில் இன்னும் பரபரப்பை கூட்டியது.
இந்த நிலையில், இன்று காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் 17 பேரின் சொத்து பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிடுகிறார். இது முதல் பாகம் என்றும், அடுத்த பாகம் விரைவில் வெளியிடப்படும் என்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலை வெளியிடும் திமுக பிரமுகர்களின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பார்க்க கமலாலயத்தில் அகன்ற திரை வைக்கப்படவுள்ளது. அதில் முழு விவரமும் ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நேரடி பத்திரிகையாளர் சந்திப்பு இல்லாத நிலையில், இந்த பட்டியலை வெளியிட்டவுடன், அண்ணாமலை திரையில் தோன்றி பேச இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அண்ணாமலையின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.