கரூரில் அண்ணனும், தம்பியும் ஒரே பெண்ணை… செய்தியாளர்கள் சந்திப்பில் லீக்கான அண்ணாமலையின் பேச்சு.. வைரலாகும் வீடியோ!!
Author: Babu Lakshmanan2 June 2023, 8:08 pm
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பை நடத்திய அண்ணாமலை, உரையை முடித்துக் கொண்டு, பாஜக நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஒரே பெண்ணை இருவர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் மனுஷனாக இருக்கவே தகுதியில்லை, என பெயரைக் குறிப்பிடால் கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு பத்திரிக்கையாளர்களின் கேமராவில் பதிவாகி, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் காட்டமாக டுவிட் போட்டுள்ளார். அதாவது, மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் படுக்கையறையையும் எட்டிப்பார்ப்பது அரசியலா? யாருடன் இருக்கிறாரோ, யாரை வைத்துக்கொண்டு யாருடன் தூங்குகிறார்களோ, இது அவருடைய மலிவான அரசியல். என்ன ஒரு கெட்ட வாய், கெட்ட மனம். அண்ணாமலை பேசும் போது பெண்ணைப் பற்றியும் மோசமாகப் பேசுகிறார். சொந்தக் கட்சிக்காரர்கள் குறித்தும் இப்படித்தான் கருத்துகளை பேசுகிறார்.
உண்மை தெரியாமல் அவரை ஜட்ஜ் செய்து கொள்கிறார். அண்ணாமலை முழு அழுக்கு மற்றும் மோசமான குற்றவாளி. அண்ணாமலை முற்றிலும் மோசமானவர் மற்றும் கண்ணியம் இல்லாதவர் கிசுகிசு பேசுவதற்கு வேறு வேலை இருக்கிறது. மேனேஜர் அவருக்கு சரி, தலைவர் அல்ல. கடந்த டிசம்பரில், நான் இல்லாதபோது, ஒரு கூட்ட அரங்கில் 150 பேர் முன்னிலையில் அவர் என்னிடம் அதையே செய்தார். அண்ணாமலை ஒரு கோழை”, எனக் கடுமையாக பதிவிட்டிருந்தார்.