ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்திடும் : வார்னிங் கொடுத்த அண்ணாமலை…!!

Author: Babu Lakshmanan
21 July 2022, 7:24 pm

ஊழல் பட்டியலை வெளியே விட்டால் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும், 4 வருடம் ஆட்சியில் இருக்க வேண்டுமென நினைத்து இருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது. இதில் பங்கு கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அகில இந்திய தலைவர் தேஜஸ்வி சூரியா ஆகியோர் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தனர்.

விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- திரௌபதி முர்மூ வெற்றி சமூக நீதியை நிலைநாட்டி இருக்கிறது. திமுக ஆட்சி வந்த பிறகு அவர்கள் செய்திருக்கக் கூடிய ஒரே சாதனை. அனைத்து பொருட்களின் விலை ஏற்றம் தான் மனசாட்சி இல்லாத அரசு. மக்கள் எவ்வளவு சொன்னாலும் தான் செய்த தவறில் இருந்து பாடத்தை கற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லாத அரசாக இருக்கிறது. மக்கள் தான் இந்த அரசை கேள்வி கேட்க வேண்டும்.

மின் கட்டணம் உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று கூறினார்கள். இதற்கும் செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த பிறகு மின்சார துறை அமைச்சரை காணவில்லை. மத்திய அரசின் மீது பழி போடுவது மட்டும்தான் தமிழக அரசின் உடைய வேலையாக இருக்கிறது. விலைவாசி உயர்வால் அமைச்சர்களோ மற்றவர்கள்தான் பலனடைவார்களை தவிர, விவசாயிகள் பயன் அடைவதில்லை.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யக்கூடிய பாலின் விலையை உயர்த்தினால் சந்தோஷமாக வரவேற்கிறோம். கார்ப்பரேட் நண்பர்கள் பயன் பெறுவதற்காக இந்த விலை ஏற்றம் செய்யப்படுகிறது. காலையிலிருந்து மாலை வரை விலை உயர்த்துவது மட்டும்தான் இந்த அரசின் வேலையாக இருக்கிறது. எந்த பொருள்களின் விலையை உயர்த்தலாம் என முதலமைச்சர் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அனைத்திலும் திமுக கெட்ட பெயர் வாங்குவதற்கு காரணம் செயலின்மை தான். பாஜக மீது பழி போட்டு தான் திமுக அரசு நடக்கும் என்றால், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், எனக் கூறினார்.

தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் தேசிய புலனாய் முகாமை சோதனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இன்று காலை தமிழக ஆளுநரை சந்தித்து நேரில் பேசினேன் பாஸ்போர்ட் ஊழலில் ஏடிஜிபி சில அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதற்கான ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்து வந்துள்ளேன். போலி பாஸ்போர்ட் என்பது இந்தியாவின் இறையாண்மையில் உள்ளது. போலி பாஸ்போர்ட் மூலமாக சமூகவிரோதிகள் குறிப்பாக இலங்கை தமிழர்கள் பல குற்ற செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இதை ஆளுநர் கம்பீரமாக எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதில் கடுமையான நடவடிக்கை வரும் என நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மௌனம் காப்பது திமுக தான் வேண்டுமென்றே அங்கு கலவரம் நடந்த்தியிருக்கிறது திமுகவின் மெத்தனம், காவல்துறையின் செயலின்மை காரணம் பாரதிய ஜனதா கட்சியின் அறிக்கை வெளியிட்ட பிறகு தான் சிபிசிஐடி விசாரணை தொடங்கி இருக்கிறது. நான்கு நாட்களாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எஸ்கேப். அவர் எங்கு சென்றார் என்பதை நீங்க தான் கேட்க வேண்டும், எனக்

ஊழல் பட்டியலை வெளியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சர்கள் ஏதோ வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொந்த ஊருக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி மேடையில் வீர வசனம் பேசுவார். ஆனால், சொந்த ஊருக்குள்ளே அவரை மக்கள் விடவில்லை. அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் இந்த ஆட்சி கவர்ந்து விடும் பொறுமையாக இருப்போம். அவர்கள் நான்கு வருடம் ஆட்சியில் இருக்க வேண்டுமென நினைத்து இருக்கிறார்கள். அதை பார்த்துவிட்டு முடிவு எடுப்போம், என தெரிவித்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 844

    0

    0