ஊழலில் ஊறித்திளைக்கும் திமுக அரசுக்கு முடிவுரை… இராமேஸ்வரத்தில் எங்களின் முதல் அடி : அண்ணாமலை சூளுரை..!!!

Author: Babu Lakshmanan
28 July 2023, 11:28 am

இன்று தொடங்கவிருக்கும் என் மண் என் மக்கள் நடை பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் பாஜகவினரை அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணத்தை இன்று மாலை தொடங்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நடத்தப்படும் இந்த நடை பயணத்தின் போது, மத்திய அரசின் சாதனைகளையும், திமுக அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளையும் மக்களிடையே கொண்டு செல்ல அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

இன்று மாலை 5.45 மணிக்கு விழா நடைபெறும் திடலுக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலையின் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். முன்னதாக, அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அண்ணாமலையின் நடைபயணத் தொடக்க விழாவில் பங்கேற்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடைபயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவை எச்சரித்து ஒரு டுவிட் போட்டுள்ளார். அதாவது, இன்று, புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் தொடங்கவிருக்கும் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தில் பங்கு பெறவிருக்கும் என் அன்பு தமிழக பாஜக சொந்தங்களையும், பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் மக்கள் நலத்திட்டத்தால் பயன் பெற்ற பயனாளிகளையும், பொது மக்களையும் சந்திக்க மிக ஆவலுடன் உள்ளோம்!

ஊழலில் ஊறித்திளைக்கும் திமுக அரசுக்கு முடிவுரை எழுத, இராமேஸ்வரத்தில் முதல் அடியை எடுத்து வைப்போம்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Dhanush Idli Kadai movie update வெளிநாட்டில் வியாபாரத்தை தொடங்கிய”இட்லி கடை”…தனுஷ் போட்ட பக்கா பிளானை பாருங்க..!
  • Views: - 299

    0

    0