திருவண்ணாமலையில் பெண் இன்ஸ்பெக்டரை அறைந்த திமுக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. அரசு அதிகாரிகளே மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்படுவதும், திமுகவினரால், காவல்துறை அதிகாரிகள் மிரட்டப்படுவதும், பெண் காவலர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவதும் என, அரசு இயந்திரம் முற்றிலுமாகச் செயலிழந்திருக்கிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலை கோவிலில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை, திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஶ்ரீதரன் என்ற நபர், கன்னத்தில் அறைந்திருக்கிறார் என்ற செய்தி, திமுக ஆட்சியில், காவல்துறையின் மாண்பு எந்த அளவுக்கு கீழிறங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
திமுக கட்சிக்காரர் என்ற ஆணவத்தில், பொதுமக்கள் முன்னிலையில் பெண் காவல்துறை அதிகாரியையே தாக்க முடியுமென்றால், சாதாரண பொதுமக்கள் நிலை என்ன? தனது 2006 – 2011 ஆட்சிக் காலத்தில் செய்த அடாவடிகளால், தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாமல் இருந்ததை மறந்து விட்டதா திமுக?
பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. திமுக குண்டர்களைப் போல, பொதுமக்களும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்தால், திமுகவினருக்குத் தெருவில் கூட இடம் இருக்காது என்பதை மறந்து விட வேண்டாம்.
பெண் காவல் அதிகாரியைத் தாக்கிய ஶ்ரீதரன் என்ற திமுக நபரை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருவண்ணாமலை கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக இருக்கும் அவரது அண்ணன் ஜீவானந்தம் என்ற நபரை, உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.