திமிலை முறுக்கி துள்ளிய ஜல்லிக்கட்டு காளை… உடனே அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்… நடை பயணத்தின் போது நிகழ்ந்த ருசீகரம்..!!
Author: Babu Lakshmanan4 August 2023, 12:41 pm
மதுரை மேலூரில் துள்ளிய ஜல்லிக்கட்டு காளையை தடவி கொடுத்து அமைதிப்படுத்திய அண்ணாமலையின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலலாகி வருகிறது.
என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொணடு வரும் நிலையில், இன்று மதுரை மாவட்டத்தில் பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரி அருகே பாதயாத்திரை துவங்கியுள்ளது. இதில் ஏராளமான பாஜக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
பாதயாத்திரை தொடங்கும் இடத்தில் 10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை கட்டி வரவேற்பு கொடுக்கும் விதமாக வைத்திருந்தனர். அப்பொழுது அண்ணாமலை காளை அருகே சென்ற போது எகிறி துள்ளியது. உடனே அதை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். இதனால், காளை அமைதியானது.
தொடர்ந்து பாதயாத்திரையானது சந்தைப்பேட்டை பெரிய கடை வீதி நகைக்கடை பஜார் , சிவன் கோவில், செக்கடி, அழகர் கோவில் ரோடு, சென்று மேலூர் பஸ் ஸ்டாண்டிற்கு சென்றடைகிறது. வழிநெடுகிலும் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்தும் மலர்கள் தூவியும் பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனர்.