அமைச்சரையே 3 நாட்களுக்குப் பிறகு மீட்ட திமுக… இவங்க மக்களை மீட்க போறாங்களாம் ; சும்மா ஒரு பட்டியலை அறிவித்த CM ஸ்டாலின் ; அண்ணாமலை விமர்சனம்

Author: Babu Lakshmanan
20 December 2023, 3:41 pm

களத்துக்கு வர இயலாத நிலையில் இருக்கும் அமைச்சர் வந்து, பொதுமக்களை மீட்பார் என்ற வெற்று அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டிருப்பது வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மூத்த அமைச்சர்கள் பலரை நியமித்திருப்பதாக, கடந்த டிசம்பர் 18 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த அமைச்சர்களில் ஒருவரான, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், சொந்த அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை, களத்திலேயே காண முடியவில்லையே என்று பொதுமக்கள் உட்பட, நாங்கள் அனைவருமே தேடிக் கொண்டிருந்த போது, மூன்று நாட்களாக, மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த அமைச்சரை, இன்றுதான் மீட்டு வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.

தனது அமைச்சரே வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட வேண்டிய நிலைமையில் இருக்கிறார் என்பது கூடத் தெரியாமல், மீட்புப் பணியில் அவரது பெயரையும் சேர்த்து, பெயருக்கு ஒரு பட்டியலை அறிவித்து விட்டு, அவசரகதியாக ‘இந்தி’ கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த, டெல்லிக்குச் சென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

களத்துக்கு வர இயலாத நிலையில் இருக்கும் அமைச்சர் வந்து, பொதுமக்களை மீட்பார் என்ற வெற்று அறிவிப்பு, திமுக அரசு, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது, என தெரிவித்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்