உண்மையான அண்ணாமலையே நான்தான்… அவமான சின்னத்தின் அழுக்கு உதயநிதி ; எச்.ராஜா பரபர பேச்சு..!!

Author: Babu Lakshmanan
26 September 2023, 5:52 pm

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பூஜ்ஜியம் வாங்கும் என பாஜக மூத்த தலைவர் ஹச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாஜக மூத்த தலைவர் ஹச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் மூலவர், சண்முகர், சம்ஹாரமூர்த்தி மற்றும் வள்ளி, தெய்வானை சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தார்.

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- மத்திய பாஜக அரசை விமர்சிப்பதற்கு திமுகவிற்கு தகுதி இல்லை. திமுகவின் ஊழல் லட்சணம் 1977ம் ஆண்டே மக்களுக்கு தெரியும். ஊழலில் சிறை சென்ற செந்தில்பாலாஜியை ஏன் இலாகா இல்லாத அமைச்சராக திமுக வைத்துள்ளது..?

இந்த நாட்டிற்கு அவமான சின்னம் திமுக. திமுக அவமான சின்னத்தின் அழுக்கு உதயநிதி ஸ்டாலின். இந்து மதம் குறித்து வெறுப்புணர்வுடன் பேசிய உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும். திமுக அரசு நேர்மை தவறிய அரசாக செயல்படுகிறது. திமுக அரசு தொலையும்போதுதான் மக்களுக்கு நிம்மதி ஏற்படும் என மக்கள் நம்புகின்றனர், என தெரிவித்தார்.

அப்போது அவர் பேசிச்கொண்டிருக்கும் போது திடீர் மின்தடை ஏற்பட்டபோது, திமுக அணில்களின் வேலையாக இருக்கும் என சுட்டிக்காட்டி பேசிய அவர், திமுக ஆட்சி வந்ததிலிருந்தே மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாகவும், இபிஎஸ், ஓபிஸ் இருக்கும் போது யூபிஎஸ் தேவைப்படவில்லை என்றும், அவர்கள் இருவரும் சென்றபின் யூபிஎஸ் இல்லாமல் இருக்க முடியவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும், சினிமாவில் ரஜினி அண்ணாமலை என்றால், நிஜவாழ்க்கையில் H.ராஜா தான் அண்ணாமலை என்றும், வீடு வீடாக பால் ஊற்றிதான் பட்டம் படித்ததாக தெரிவித்தார். இந்து மதத்தை அழிப்பதாக திமுக பேசியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது என்றும், இதற்காக எதிர்வினை வரும் பாராளுமன்ற தேர்தலில் தெரியும் என்றும், காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பெரிய பூஜ்ஜியம் வாங்கும், என்றார்.

மேலும், காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்கு அதன் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே போதும் எனவும் அவர் விமர்சனம் செய்தார்.

  • Missed to act with Rajini.. Famous actress Felt! ரஜினிக்கு மகளாக நடிக்க வேண்டிய சான்ஸ்.. மண்ணை அள்ளி போட்டுட்டாங்க.. புலம்பும் நடிகை!