அடுத்தடுத்து ஜெயிலுக்கு போகப்போகும் திமுக சீனியர் அமைச்சர்கள்… அடுத்து திருச்சியா..? எச்.ராஜா ஆருடம்..!!
Author: Babu Lakshmanan3 January 2024, 9:48 am
மூத்த அமைச்சர்கள் ஒவ்வொருவராக உள்ளே செல்வார்கள் என்றும், அது திருச்சியா அல்லது வேறு எங்குமா என தெரியவில்லை என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து தமிழக பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :- தமிழகத்தை பொறுத்தவரை மாண்புமிகு பிரதமர் வரும்போது எல்லாம் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் மக்கள் நலனுக்காக திட்டங்களை துவங்கி வைத்து கொண்டு இருக்கிறார். கடந்த 9 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் தமிழகத்தில் மத்திய அரசு கொடுத்துள்ளது.
திருச்சியில் புதிய விமான நிலையம் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா மாண்புமிகு பிரதமர் அவர்கள் கலந்து கொண்டார்கள். மிகப் பிரம்மாண்டமான அளவில் எழுச்சி வரவேற்பினை பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கொடுத்திருக்கின்றனர். இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கூட்டமானது தேர்தலில் பூத் கமிட்டிக்கு என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசினுடைய பயனாளிகள் 43 கோடி பயனாளிகள் இருக்கின்றன.
அவர்களை பட்டியல் எடுத்து நேரடியாக சந்தித்து வருகின்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பது குறித்து செயல்பாடுகளை பேசி வருகிறோம். பிரதமர் வரவேற்பிற்கு வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் இருப்பது அரசியலில் ஒரு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பில் அரசின் செயல்பாடுகளில் பொதுமக்களுக்கு ஒரு அதிருப்தி உள்ளது. பிரதமர் வருகை முன்னிட்டு வணக்கம் மோடி என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படுகிறது. இதன் காரணமாக தமிழக முதல்வர் பேசும் பொழுது கோஷம் எழுப்பப்பட்டது.
தமிழக முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டது என்பது பாதுகாப்பிற்காக வாகனங்கள் வாங்குவது என்பதில் என்னுடைய தலையீடு இல்லை. ஆனால் வெள்ள பாதிப்பு சென்னையில் ஏற்பட்டபோது 92 சதவீதம் பணிகள் முடிவடைந்தது என கூறியும், 42% பணிகள் முடிவடைந்தது எனக்கூறி உள்ளனர். ஊழல் என்பது நிறைந்து காணப்படுகிறது. அமலாக்கத் துறையின் ஆதாரங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. மணல் திருட்டில் 4000 கோடி ஊழல் நடந்துள்ளது. மதிய அமைச்சர் தமிழகம் வந்தபோது, தமிழக அரசு கொடுத்த அறிக்கையின்படி 42% முடிவடைந்தது எனக் கூறியுள்ளனர். ஆனால், பொதுமக்களிடம் 92 சதவீதம் பணிகள் முடிவடைந்தது எனக் கூறியுள்ளனர். தமிழகம் ஊழலில் மூழ்கியுள்ளது என்பது அதிகம், என தெரிவித்தார்.
அமலாக்கத்துறை சோதனை திருச்சியில் என ஏற்கனவே நீங்கள் கூறியது பற்றிய கேள்விக்கு, 77 ஆம் ஆண்டு சர்க்கரை என்னாச்சு என்றால் இரும்பு தின்னு விட்டது என்றும், சாக்கு எங்கே என்று கேட்டால் கரையான் தின்றுவிட்டது என கூறி ஊழல் செய்தனர். ஆனால் எங்கள் அமைச்சர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை என மாறு தட்டி கொண்டனர். தற்பொழுது, ஒவ்வொருவராக மாட்டிக் கொண்டு வருகின்றனர். பொன்முடி சுபமுகூர்த்தத்தில் அவரை வழி அனுப்பி வைத்துள்ளோம். இதேபோல் அடுத்தடுத்து மூத்த அமைச்சர்கள் உள்ளே போவார்கள். ஆனால், திருச்சி இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியாது, எனக் கூறினார்.
தமிழக முதல்வர் உரையாற்றும் போது பாரத பிரதமர் பெயர் உச்சரிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு.. மோடி ஜி வந்தால் தமிழகத்தில் உற்சாகம் அதிகமாக உள்ளது. இருந்தாலும் முதலமைச்சர் பேசும் பொழுது கொஞ்சம் அடக்கி வாசித்து இருக்கலாம். ஆனால் அந்த உற்சாகத்தை கட்டுப்படுத்துவது கஷ்டம், என்றார்.
ஓபிஎஸ் பாரத பிரதமரை சந்தித்தது குறித்த கேள்விக்கு, பல்வேறு கட்சியினர் இந்தியா கூட்டணியில் இருந்து வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதில் அவரும் ஒருவர், அவருடைய கட்சியும் என்டிஏ கூட்டணியில் இருக்கிறது அதனால் சந்தித்தார் என கூறினார்.
0
0