ஸ்டிக்கர் அரசாங்கத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டுங்க : திமுக அரசு விளம்பர பதாகைகளில் பிரதமர் படத்தை ஒட்டிய பாஜக பிரமுகர்..!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2022, 10:21 am

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வரும் 28ஆம் தேதி முதல் முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 44-வது செஸ் ஒலியம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

இப்போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பர பதாகைகளில் பிரதமர் படம் இடம்பெறாதது, அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது என தமிழக பா.ஜ.க கட்சி வன்மையாக கண்டித்து வருகிறது.

அரசின் விளம்பர பதாகையில், பிரதமர் படம் இடம் பெறாவிட்டால், நாங்கள் தனியாக வைப்போம் என பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழாவிற்காக தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமர் மோடி படத்தை பா.ஜ.க, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு பிரிவின், மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஒட்யுள்ளார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி, இது திமுக நடத்தும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி கிடையாது, இது சர்வதேச போட்டி.

பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அவருடைய புகைப்படத்தை போடாமல் திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியாக அவரின் போட்டோவை தவிர்க்கிறது. இதனால் நான் பிரதமர் போட்டோவை பதிவிட்டது போல, அந்தந்தை மாவட்ட பாஜக தலைவர்கள் திமுக மாடல் அரசு விளம்பரங்களில் பிரதமர் போட்டை பதிவிட வேண்டும், ஸ்டிக்கர் அரசாங்கத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டுங்கள் என வேண்டுகோள் வைத்தார்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 658

    0

    0