பழனி கோவிலில் மாநாடு: முதல்வர் பழனி கோவிலில் சாமி கும்பிடுவாரா? : சீண்டிய பாஜ தலைவர்…!!

Author: Sudha
9 August 2024, 9:29 am

பழநியில் நடக்க உள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் கலந்து கொண்டால் முதலில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு நெற்றியில் திருநீறு அணிந்து கலந்து கொள்ள வேண்டும்.

பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்த பிறகே முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும்” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.

மேலும் கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க வேண்டும். கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டி வருகின்றனர். கோயில் நிதியை கோயில் தவிர மற்ற பணிகளுக்கு பயன்படுத்த கூடாது.கோயிலில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

கோயில் கும்பாபிஷேகங்கள் பக்தர்கள் நன்கொடையில் நடைபெறுகிறது. ஹிந்து விரோத தீயசக்திகளிடம் ஹிந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும். பழநி கோசாலை மாடுகள் பராமரிப்பு இன்றி பரிதாபமாக இருந்தது. அதை வெளிப்படுத்திய என்மீது வழக்கு பதிந்தனர் என்று தெரிவித்தார்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ் கட்சியினர் தற்போது வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைக்கு எதிராக பேசவில்லை.வங்கதேசத்தில் 20 சதவீத ஹிந்துக்கள் இருந்தனர். தற்போது 7 சதவீதம் உள்ளனர்.

பாஜக மட்டுமே உலக ஹிந்துக்களுக்கு ஆதரவாக உள்ளது.

சினிமா உலகை முதல்வர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் கோயில்களை திமுக மயமாக்க அமைச்சர் சேகர் பாபு முயற்சி செய்வதை கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!