மதுரை : திமுக அரசு மீது மக்களின் அதிருப்தி கடுமையாக உள்ளதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகர் நேதாஜி சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது :- பிரதமர் மோடியின் திட்டத்தில் பயன்பெற்ற ஒரு கோடி பயனாளிகளுடன் செல்பி என்ற நிகழ்ச்சியை மதுரையில் தொடங்கி வைத்துள்ளேன். மத்திய அரசின் அதிகளவிற்கு பெண் பயனாளிகள் தான் பயன்பெற்றுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டவர்களும் பயனாளிகள் தான்.
பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் அடிப்படையில் பெண்களை மையப்படுத்தி ஆட்சியை நடத்தி வருகிறார். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். மோடி ஆட்சியில் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு என்பது திமுக மக்களுக்கு திட்டங்கள் செய்துள்ளதால் ஓட்டு போடுவார்கள் என்றால், எதற்காக வாக்காளர்களுக்கு பரிசுபொருட்களை வழங்கி மக்களை அடைத்து வைக்கின்றனர். மக்களை சுற்றுலா அழைத்து செல்வது போன்ற புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர். திமுக அரசின் மீது மக்களின் அதிருப்தி கடுமையாக உள்ளது. அதனை சரிகட்ட பார்க்கிறது. ஆனால் அது நடக்காது, தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றிபெறும்.
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்களில் தமிழக அரசு தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் சிறுமி கூட்டு பாலியல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். மருத்துவக் கல்வியில் மாற்றம் குறித்து உச்சநீதிமன்றம் கூறிய கருத்து தீர்ப்பாக மாறாது. உச்சநீதிமன்றம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கருத்தை கூறுவார்கள். நீட் தேர்வு தீர்ப்பு வரும்போது பார்த்துகொள்ளலாம், என்றார்.
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும்…
தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…
This website uses cookies.