முதல்ல பொது மயானம் இருக்கா..? பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யாதீங்க ; திமுக மீது வானதி சீனிவாசன் பாய்ச்சல்..!!

Author: Babu Lakshmanan
19 April 2023, 3:45 pm

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு அரசியல் காரணங்களுக்காக ஏமாற்றக்கூடிய வகையில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, பட்டியலின மக்களுக்கான பாதுகாப்பு உரிமைகள், இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளை, கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க கோரி அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தனர்.

இதனையடுத்து, செய்தியாளரை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதாவது :- பட்டியலின ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்கனவே பட்டியலினத்து மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிற பலனை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி அந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என பாஜக சார்பில் நாங்கள் சில கருத்துக்களை முன்வைத்தோம்.

மதம் மாறிய பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் அரசின் இட ஒதுக்கீடு சலுகையை ஆராய்வதற்கு மத்தியிலே மோடி தலைமையிலான அரசு 2022ம் ஆண்டு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி K.G. பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்த குழு இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது.

இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அவர்களுக்கு அந்த உரிமை கிடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதனுடைய விசாரணை கடந்த வாரம் கூட நடைபெற்றது. மேலும், இது ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இது தொடர்பான விவகாரங்களை மத்திய அரசு மேற்கொண்டு வரும்போது, உச்சநீதிமன்ற வரம்பிற்கு உள்ள ஒரு விவகாரத்தில், மாநில அரசு ஏன் இந்த தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என பாஜக முன் வைக்கிறது. கிறிஸ்துவத்திற்கும், இஸ்லாமியத்திற்கும் மதம் மாறினால் கூட தொடர்ச்சியாக தீண்டாமை கொடுமை பட்டியல் இன மக்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த தீர்மானம் மறைமுகமாக சொல்ல வருகிறதா..? என்று நாங்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினோம்.

பட்டியலிட மக்களின் மேம்பாட்டுக்காக சமூக நீதி அரசு, திராவிட மாடல் அரசு எனக் கூறும் திமுக அரசு, வேங்கை வயல் பிரச்சனை, பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான சிறப்பு சட்டம், ஒவ்வொரு வாரமும் கௌரவ கொலைகள் தமிழகத்தில் நடந்து வருகிறது. இதனை தடுப்பதற்கான சட்டம் இவற்றைப்பற்றி எல்லாம் எதையும் கவலைப்படாத திமுக, முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக இந்த தீர்மானம் கொண்டுள்ளது என பாஜக கருதுகிறோம். இந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள், வெளிநடப்பு செய்துள்ளோம்.

இன்னும் கூட தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு பொதுவான மாயானம் கிடையாது, இவை அனைத்தும் மாநில அரசின் விவகாரத்தில் வரம்பில் வரும் நிலையில் அந்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு அரசியல் காரணங்களுக்காக ஏமாற்றக்கூடிய வகையில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்ததாக குற்றம் சாட்டினார்.

அடிப்படையில் மதம் மாறுபவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்? மதம் மாறினாலும் மக்களுக்கு தீண்டாமை நிலவுகிறது, பட்டியல் என மக்களுக்கு பொது மாயான உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில், இதையெல்லாம் சரி செய்யாமல், கண் துடிப்பிற்காக இதையெல்லாம் இந்த அரசு செய்கிறது என்பது தான் எங்களுடைய வாதம், என தெரிவித்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!