சாமி, கோவில் என்றாலே திமுகவுக்கு அலர்ஜி… இந்த விஷயத்தில் திருமாவளவன் அரசியல் செய்யக் கூடாது : வானதி சீனிவாசன்..!!

Author: Babu Lakshmanan
19 September 2023, 8:22 pm

திமுக அரசியல் செய்வதற்காக இந்திய ஜனாதிபதிக்கு அவமரியாதை ஏற்படுத்தி உள்ளதாகவும், திமுக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதையொட்டி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன், கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது ;-புதிய கூட்டத்தொடரில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடி காலத்தில் சாத்தியமாகி உள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கும் சமுதாயம் முழுமையாக மாற வேண்டும் என்றால் பெண்களின் தேவை தேவைப்படுகிறது. பெண்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.

குறுகிய காலத்தில் கழிப்பிடம், வீடு, கேஸ் இணைப்பு, சுகதராமான நீர் போன்றவை கோடிக்கணக்கில் மத்திய அரசு பணம் ஒதுக்கி செயல்படுத்தி உள்ளது.பெண்களின் கல்வி, சுகாதாரம் போன்றவை முக்கிய பங்காக இருக்கும். 33% மசோதா நிறைவேற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், எனக் கூறினார்.

தொடர்ந்து, வாக்கு வங்கி பற்றி பேசும் திமுக எம்பி கனிமொழி, மூன்று நாட்களுக்கு முன்பு திமுகவில் தீர்மானம் போட்டுள்ளனர். அப்படி போடப்பட்ட தீர்மானம் யாரை ஏமாற்ற என கேள்வி எழுப்பினார். ஐக்கியா நாடுகளின் ஆய்வில் இந்தியாவில் பெண்களுக்கான சமூக பங்களிப்பு அதிக அளவில் இருப்பதாகவும், பெண்களுக்கான தலைமை பண்பு வெகுவேகமாக மாறிக் கொண்டிருப்பதாக கூறினார்.

பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களுக்கு காலங்காலமாக ஏற்பட்ட கஷ்டங்கள் போக்கி, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேட்டுள்ளார்.

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவில் வைத்து திருமாவளவன் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, இதை வரவேற்க வேண்டும். திமுக அரசியல் செய்வதற்காக இந்திய ஜனாதிபதிக்கு அவமரியாதை ஏற்படுத்தி உள்ளனர். திமுக இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சாமி, கோவில்,பூஜை என்றாலே திமுகவினருக்கு ஒரு அலர்ஜி. திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது, எனக் கூறினார்.

  • Tamannaah Bhatia caravan incident கேரவனில் தமன்னாவுக்கு அப்படி..? கண்ணாடியைப் பார்த்த அந்த நொடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!