காங்கிரஸ் பெயரை சொல்லாதது ஏன்..? காவிரி விவகாரத்தில் திமுக இரட்டைவேடம் ; வானதி சீனிவாசன் பளார்…!!

Author: Babu Lakshmanan
9 October 2023, 2:25 pm

காவிரி நதிநீர் தீர்மானத்தில் காங்கிரஸ் பெயரை குறிப்பிடாதது ஏன் என்று திமுகவுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ததண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்த பிறகும், காவிரி நீர் உரிமையை காப்பதில் திமுக அரசு எப்போது உறுதியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் பேசினர். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தீர்மானம் முழுமையாக இல்லை என்றும், காவிரி நதிநீர் தீர்மானத்தில் காங்கிரஸ் பெயரை குறிப்பிடாதது ஏன் என்று கூறி பாஜக வெளிநடப்பு செய்தது.

பின்னர், செய்தியாளர்களிடம் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசியதாவது :- கர்நாடகா அரசிடம் இருந்து சட்டப்பூர்வமான உரிமையை, அதாவது காவிரி நதி நீரை பெற்றித்தர முடியாத இயலாமையை மறைக்க முயல்கிறார். அணை பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற போது, அதை எதிர்த்து விட்டு, இப்போது இரட்டை நிலைப்பாடு எடுப்பது ஏன்.? இந்த தீர்மானம் முழுமையான தீர்வை நோக்கி நகராமல் இருக்கிறது.

தமிழக மக்களின் நலனை சமரசம் செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு. தமிழகத்தின் நீர் உரிமைக்காக என்றும் நாங்கள் குரல் கொடுப்போம். கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்த போது எந்த சிக்கலும் வரவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த போது மட்டும் சிக்கல் வருவது ஏன்? கர்நாடகா அரசின் பதவியேற்பு விழாவுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், காவிரி நீர் விவகாரம் பற்றி பேசவில்லை..? தமிழக விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர், எனக் கூறினார்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 351

    0

    0