சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை – திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு : இருவரும் என்ன பேசினார்கள்?

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2022, 10:25 am

தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்பு 14 மாதங்கள் முடிவடைந்த நிலையில் நாள்தோறும் திமுக-பாஜக இடையே வார்த்தை போர் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

மின்வாரியத்தில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு, முதலமைச்சர் துபாய் பயணத்தில் குடும்பத்தோடு சுற்றுலா, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கியதில் டெண்டர் முறைகேடு, ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் சாதகமாக தமிழக அரசு செயல்பாடு என ஒன்றன்பின் ஒன்றாக திமுக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தின் பொழுது அமைச்சர்களிடம் பாஜகவினர் பணம் பெற்றதாகவும் புகார் கூறியிருந்தது. மேலும் கர்நாடகாவில் ஆட்சி கலைக்க பாஜகவிற்கு அதிமுக பணம் கொடுத்ததாகவும், திமுக கூறியிருந்தனர்.

மேலும் அதிமுக அமைச்சர்களிடம் இருந்து பணம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டை பாஜக மறுக்க முடியுமா என்றும் திமுகவினர் சவால் விடுத்திருந்தனர். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 630 கோடி ரூபாய்க்கு நஷ்டஈடு வழக்கும் தொடர்ந்து இருந்தனர்.

இதுபோன்று திமுக-பாஜக கடும் வார்த்தை போர் நடைபெற்று வரும் நிலையில், உதயநிதியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சந்தித்து உண்டு பேசிய சம்பவம் தமிழக அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வேல்ஸ் பல்கலை., வேந்தர் ஐசரி கணேசனின் தாயார் புஷ்பா காலமானதை தொடர்ந்து ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமானர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்திருந்தார். அதே நேரத்தில் தி.மு.க., இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினும் வந்திருத்நார்.

ஐசரி கணேசின் தாயார் புஷ்பா அஞ்சலி செலுத்திய பின், இருவரும் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது, கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நலம் குறித்து அண்ணாமலை கேட்டறிந்தார். இருவரும் நேரடியாக சந்தித்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 752

    0

    0