அதிமுகவை கூட்டணிக்கு இழுக்க எடப்பாடியாருக்கு தொடர்ந்து நெருக்கடி ; பாஜக மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு…!!

Author: Babu Lakshmanan
7 February 2024, 8:25 am
Quick Share

மத்திய அரசு பாஜக கூட்டணிக்கு அதிமுகவை கொண்டு வர தொடர்ந்து எடப்பாடியாருக்கு தொந்தரவு கொடுத்து வருவதாக தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

வரும் 8ஆம் தேதி திருநெல்வேலி நேருஜி கலையரங்கத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண ஹாலில் வைத்து நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில், தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில், எடப்பாடியார் யாரை நிறுத்தினாலும் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும். திமுக பொய்யைச் சொல்லி ஓட்டு வாங்கியது. குறிப்பாக நீட், கல்வி கட்டணம் ஆகியவற்றை பொது மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

மத்திய அரசு பாஜக கூட்டணிக்கு அதிமுகவை கொண்டு வர தொடர்ந்து எடப்பாடியாருக்கு தொந்தரவு கொடுத்து வருகிறது. வரும் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதன் மூலம் மீண்டும் வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சராக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது, என்றார்.

இக்கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை குழுவிடம் வழங்க தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் வக்கீல் செங்குட்டுவன் மாவட்ட செயலாளரும் , முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி. சண்முகநாதனிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 285

    0

    0