‘முறையற்ற கல்குவாரிகளை உடனே மூட வேண்டும்’: நெல்லையில் பாஜகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்..!!
Author: Rajesh20 May 2022, 8:59 am
நெல்லை: கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரி பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), இளையநயினார்குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), ஆயன்குளத்தை சேர்ந்த முருகன் (23) ஆகிய 3 பேர் பலியானார்கள்.
விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன், நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் ஆகியோர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரியும், முறையாக அனுமதி பெறாத குவாரிகளை மூடக்கோரியும் நெல்லையில் பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.