நிதிச்சுமையில் இருக்கும் தமிழக அரசு… ரூ.80 கோடியில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அவசியமா..? கரு.நாகராஜன் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
16 September 2022, 6:25 pm

இந்துக்களுக்கு எதிராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மூன்று நாட்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி 5 லட்சம் கையெழுத்துக்களை பெற உள்ளதாக பாஜகவின் மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்களிடம் 50 லட்சம் கையெழுத்து பெற்று முதலமைச்சரிடம் அவற்றை வழங்கி, ஆ.ராசா மீது கட்சி மற்றும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது :- மோடி பிறந்தநாளுக்காக மாநில அளவில் கமிட்டி அமைத்து பணி செய்து வருகிறோம். 2G புகழ் ஆ.ராசா இந்துக்கள் தொடர்பாக பேசிய கருத்து தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும் புகார் மனு கொடுத்துள்ளோம். 1000 காவல் நிலையத்திற்கு மேல் புகாரளித்துள்ளோம். ஆன்லைனிலும் புகார் அளித்து வருகிறோம்.


நிதிச்சுமையில் இருக்கும் தமிழக அரசு... ரூ.80 கோடியில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அவசியமா..? கரு.நாகராஜன் கேள்வி..!!

பொதுமக்கள் கையெழுத்தை பெற்று முதலமைச்சரிடம் வழங்க உள்ளோம். இன்று முதல் 3 நாள் கையெழுத்து இயக்கம் நடத்தி 50 லட்சம் நபர்களிடம் கையெழுத்து பெற உள்ளோம். ஆ .ராசா திமுகவிலிருந்து நீக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட வேண்டும். தமிழக மக்களின் தன்மானம் காக்கும் கை எழுத்து இயக்கமாக இது நடக்க உள்ளது.

முதலமைச்சர் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது வேதனை தருகிறது. முதல்வர் ஒப்புதலோடுதான் ராசா பேசுகிறாரா என சந்தேகமாக இருக்கிறது.

சபரீசன் கோயில்களில் யாகம் செய்கிறார். கும்பாபிசேகம் நடத்துகிறார் என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு சரியானதுதான். ராசா பேச்சு முதலமைச்சருக்கும் பொருந்தும். பெரும்பான்மை இந்துக்களின் வாக்கில்தான் ஆ .ராசா வென்றார். இந்து என்ற தகுதியில்தான் அவர் தேர்தலில் போட்டியிட்டார். வீரமணியை திருப்தி செய்வது முக்கியமா..? தமிழக மக்களின் தன்மானம் முக்கியமா என முதல்வர் முடிவு செய்ய வேண்டும்.

நீட் நடக்க கூடாது என சொல்லிக் கொண்டு மறுபுறம் நீட் பயிற்சி வகுப்பு நடத்துகிறார்கள். இந்த ஆண்டில் 67ஆயிரம் மாணவர்கள் நீட்டில் தேர்வு பெற்றுள்ளனர். 7.5% மூலம் அரசு மாணவர்களுக்கு நீட்டுக்கு முன்பு இருந்ததை விட கூடுதல் இடங்கள் இந்த ஆண்டு நிச்சயம் கிடைக்கும்.


நிதிச்சுமையில் இருக்கும் தமிழக அரசு... ரூ.80 கோடியில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அவசியமா..? கரு.நாகராஜன் கேள்வி..!!

காமராசர் , எம்ஜிஆர் போல் தற்போதைய முதலமைச்சரும் மாணவர்களுக்கு ஊட்டி விட்டார். இது பல ஆண்டுகளாக தொடர்கிறது. புதிதாக எதுவும் இல்லை. என்றாலும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவளிக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது.

நரிக்குறவர் சமூகத்தினர் இதுவரை எந்த பட்டியலிலும் இல்லாமல் இருந்தனர். இப்போது பழங்குடியினர் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இனி அவர்கள் எங்கு சென்றாலும் நாடோடிகளாக பார்க்கப்படாமல் பழங்குடியின அடையாளம் அவர்களுக்கு கிடைக்கும்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் sc பட்டியலில் இருந்து வெளியேற மேற்கொள்ளும் முயற்சிக்கு பாஜக துணை நிற்கும். பிரதமர் சென்னையில் பேசும்போது தேவேந்திரர் சமூகம் குறித்து நிறைய பேசியிருந்தார். அதை உணர்ந்து அந்த மக்கள் பாஜகவிடம் நன்றியுடன் இருக்கின்றனர்.

உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு எதிராக இருக்கிறது. பிராமண சமூகம் மட்டும் அந்த பட்டியலில் இல்லை. நாட்டுக்கோட்டை செட்டியார், சைவ பிரிவு முதலியார்கள், கம்மாளர், இசுலாமியர்களின் சில பிரிவினர் என 18 பிரிவு அந்த பட்டியலில் இருக்கிறது.

மெரினாவில் கருணாநிதி நினைவு பேனா சிலை அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. என்றாலும் தொடர்ந்து சுற்றுச் சூழல் ஆய்வு நடத்தி, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமெல்லாம் நடக்கும். அதன் பிறகே பொதுப்பணித்துறையினர் பேனா சிலை அமைக்க முடியும்.

பொதுவாக தலைவர்களுக்கு நினைவு சின்னம் அமைப்பது தவறில்லை. ஆனால் தமிழக அரசிடம் பணப் பற்றாக்குறை இருக்கும் நிலையில் கருணாநிதி நினைவுச் சின்னத்திற்கு கோடிகளை இந்த நேரத்தில் செலவழிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் எல்லா நகரங்களிலும் கருணாநிதி நகர் இருக்கிறது.

ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் 10 ஆயிரம் வாங்கி கருணாநிதிக்கு ஓமந்தூரார் வளாகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளதாக எங்களிடம் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக ஆதாரங்களை பெற்று அவற்றை அதிகாரபூர்வமாக தெரிவிக்க உள்ளோம், என்று கூறினார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 491

    0

    0