இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க… தமிழகத்திற்கு துரோகம் செய்தது ஏன்..? திமுக, காங்கிரஸை போட்டு தாக்கும் பாஜக!!!

Author: Babu Lakshmanan
25 December 2023, 2:29 pm

தமிழகத்திற்கு துரோகம் செய்தது ஏன்? என்பதை தி மு க விளக்குமா? என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது ;- இந்த வருடம் தமிழகத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய். 900 கோடியும், நகர்ப்புற வெள்ள தடுப்பு மேலாண்மை நிதிக்காக ரூபாய் 561.29 கோடியும் ஏற்கனவே கொடுத்து விட்டது மத்திய அரசு. மேலும், வெள்ள பாதிப்புகள் குறித்து முழு ஆய்வும் செய்து தரவுகளை மாநில அரசு விரைவில் அளித்தால் தேசிய பேரிடர் நிவாரண நிதி அல்லது உரிய துறைகளின் மூலம் நிதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.

தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்த போது (2012-13) அன்றைய தமிழக மாநில அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய். 19,665 கோடி ரூபாய் வழங்குமாறு கேட்டும், அன்றைய தி மு க – காங்கிரஸ் அரசு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய். 121 கோடி மட்டுமே அளித்ததோடு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய். 624 கோடி ரூபாயை மட்டுமே வழங்கியது ஏன் என்ற கேள்விக்கான பதிலை சொல்லி விட்டு தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும், திமுகவினரும் இன்றைய மத்திய பாஜக அரசின் மீது குறை சொல்லட்டும், கேள்விகளை கேட்கட்டும். மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தை வஞ்சித்து ஏன்? தமிழகத்திற்கு துரோகம் செய்தது ஏன்? என்பதை தி மு க விளக்குமா?, என கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 479

    0

    0