பிரதமர் மோடி சரியாத்தான் பேசியிருக்காரு… அந்த ஒத்த வார்த்தை தான்… வீணாக அரசியல் செய்யும் காங்கிரஸ் ; இராம ஸ்ரீனிவாசன்.!!

Author: Babu Lakshmanan
25 April 2024, 4:01 pm

மதுரையில் பாஜக ஓட்டுக்கள் குறிவைத்து நீக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது :- Re distribution of wealth என்ற பெயரில் மதரீதியான சாதி ரீதியான போக்கை காங்கிரஸ் கட்சியினர் பேசியும், சொல்லியும் வருகின்றனர். ராஜஸ்தானில் பிரதமர் பேசியதை சர்ச்சைக்குரியதாக மாற்ற காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி முயல்கிறது. பிரதமர் சரியாக பேசி வருகிறார். சரியான நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை உண்மையை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் படிக்க: கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்… கைமாறிய 170 செல்போன்கள் ; உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பகீர் தகவல்..!!

காங்கிரஸ் யார் பணத்தை யாரிடமிருந்து எடுத்துக்கொடுக்க போகிறார்கள் என தெரியவில்லை. யார் நிலத்தை எடுத்து யாரிடம் கொடுக்கப்போகிறார்கள், யார் பணத்தை வாங்கி யாரிடம் கொடுக்கப்போகிறார்கள் என சொல்லவில்லை. இந்திய இறையாண்மையில் முஸ்லீம்களுக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். காங்கிரசின் பேச்சுக்களால் நாடு பிரிவினைவாதத்தை நோக்கி செல்லும் நிலை உள்ளது.

ஜின்னா பேசிய வார்த்தைகளை காங்கிரசும் ராகுலும் வேறு வேறாக பேசி வருகின்றனர். தேர்தலுக்காக இதுபோன்ற வெறுப்பு பேச்சுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்கு வாங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகிறார்கள். பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் எனும் வார்த்தையை பயன்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சியின் பேச்சுக்களில் சிறுபான்மையினர் எனும் வார்த்தையை பயன்படுத்தி உள்ளது. அதிக குழந்தை பெற்றுக் கொள்பவர்களை மட்டுமே மோடி குறிப்பிட்டு பேசினார்.

சித்திரைத் திருவிழா சனாதனம். இந்து மதம் சனாதனம். நான் சனாதனி. சனாதனம் தான் சித்திரைத்திருவிழா. கருப்பசாமி, மொட்டை அடிப்பது, அழகரை தூக்கி செல்வது, அவரை பார்க்க இலட்சக்கணக்கானோர் வருவது எல்லாமே சானதனம். சானதனம் தான் சித்திரை திருவிழா, சித்திரை திருவிழா தான் சனாதனம். மீனாட்சி கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல் சானதனம்.

மதுரையில் பாஜக ஓட்டுக்கள் திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் மதுரையில் அது குறித்த அறிக்கை வெளியிடப்படும், என பேசினார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?