விமானத்தின் எமர்ஜென்சி கதவு குறித்து வீடியோ வெளியிட்ட திமுக எம்பிக்கு பாஜக பிரமுகர் பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து பதிவிட்டுள்ளார்.
அண்மையில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமானத்தில் பயணிக்கும்போது, எமர்ஜென்ஸி எக்ஸிட்டை திறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆனால், இது தொடர்பாக எம்பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், திமுக எம்பி தயாநிதி மாறன் விமானத்தில் பயணிக்கும்போது எடுத்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் “நான் கோயம்புத்தூர் செல்ல இண்டிகோ விமானத்தில் எமர்ஜென்ஸி எக்ஸிட் அருகே தற்போது அமர்ந்திருக்கிறேன். ஆனால் நான் இந்த எமர்ஜென்ஸி எக்ஸிட்டை திறக்கபோவதில்லை. ஏனென்றால் அதை திறப்பது விமானத்திற்கும் விமான பயணிகளுக்கும் பாதுகாப்பானது அல்ல. மேலும் அப்படி திறக்காமல் இருப்பதால் அது நேரத்தை மிகவும் சேமிக்கும். அதுமட்டுமில்லாமல் நான் பிறகு மன்னிப்பு கடிதம் எழுதவேண்டியதில்லை,” எனக் கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த வீடியோவை அமைச்சர் செந்தில் பாலாஜி பகிர்ந்திருந்தார். இதனால், கொதித்துப் போன பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “ஓ ! அதை விமான நிறுவனமும். விமான போக்குவரத்து அமைச்சகமும் கவனித்து கொள்ளும். ஆனால், “நாங்கள் ஆட்சி பொறுப்பில் அமர்ந்திருக்கிறோம். ஆனால், ஊழல் செய்ய மாட்டோம், அது நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல” என்று சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்,” எனக் கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.