பன்றி பசுவாக முடியாது… ‘ஓசி சோறு வீரமணி’… ஆர்எஸ்எஸ் குறித்து பேச தகுதியே இல்லை… பாஜக பதிலடி!!

Author: Babu Lakshmanan
10 October 2022, 9:48 pm

ஆட்சியில் இருப்பவர்களை அண்டிப்பிழைக்கும் கேடுகெட்ட அரசியல் பிழைப்பை நடத்தி வரும் வீரமணிக்கு ஆர்எஸ்எஸ் குறித்து பேச தகுதியில்லை என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ விமர்சனம் செய்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் என்று தொடர்ந்து ”கோரஸ்” பாடும் ”ஒரே, ஒரே” வரிசையில், ஏன் உடனடியாக தற்போதுள்ள புல்டோசர் மெஜாரிட்டியைப் பயன்படுத்தி, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசு ”இனி ஒரே ஜாதிதான்” என்ற ஒரு அவசரச் சட்டத்தையோ அல்லது நாடாளுமன்றம் மூலம் தனிச் சட்டத்தையோ கொண்டு வந்து நிறைவேற்றிட முன்வந்து, எங்களது குரல் உண்மையான கொள்கை நிலைப்பாடு மாற்றமே தவிர, வெறும் உதட்டளவிலான உருமாற்ற உச்சரிப்பல்ல- என்பதை உலகுக்கு உணர்த்திட முன்வரலாமே.

ஆர்.எஸ்.எஸ். செய்யுமா? – இந்த இரண்டை நிறைவேற்ற இப்போது அவர்களுக்கு எது தேவை? ”ஓநாய் எந்தக் காலத்தில் சைவமாகிறதோ”, அந்தக் காலத்தில் வேண்டுமானால் இந்த ”அதிசயம், அற்புதத்தை” நிகழ்த்த முடியும். எனவே, உருமாற்ற வித்தைகளைக் கண்டு ஏமாற மக்கள் தயாராக இல்லை. மாற்றம் வேறு; ஏமாற்றம் வேறு என்பதைப் புரிந்தவர்கள்தான் இன்றைய இளைஞர்கள். 2024 இல் வாக்களிக்கப் போகும் வாக்காளர்களே இதனை நினைவில் நிறுத்துங்கள் என கூறியிருந்தார்.

இதற்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- இதற்குமுன் இருந்த பல முந்தைய ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைவிட மிகவும் கைதேர்ந்த சாணக்கியப் பார்ப்பனர்! திடீரென்று டில்லியில் இமாமை சந்திப்பார்; இஸ்லாமியர்களை வெறுப்பதல்ல எங்கள் அமைப்பு என்று வெறுப்பு அரசியல் குடியுரிமைச் சட்டங்களை மூடி மறைத்து அதன்மீதே அமர்ந்துகொண்டு புதிய வித்தை காட்டுவார்.

நான் பாப்பாத்தி தான்’ என்று தைரியமாக முழங்கிய செல்வி.ஜெயலலிதாவிற்கு அஞ்சி, நடுங்கி, பதைபதைத்து, உருண்டோடி சென்று ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டம் சூட்டி தாஜா செய்த சந்தர்ப்பவாத வீரமணி ஒரு அயோக்கியர். ஆட்சியில் இருப்பவர்களை அண்டிப்பிழைக்கும் கேடுகெட்ட அரசியல் பிழைப்பை நடத்தி வரும் வீரமணிக்கு ஆர்எஸ்எஸ் குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ பேசுவதற்கு தகுதியில்லை. தி மு க தலைவர் கருணாதியின் மகனும், இன்றைய முதல்வரின் சகோதரரின் மகனுமான மு.க.அழகிரியின் மகனால் ‘ஓசி சோறு வீரமணி’ என்று அழைக்கப்பட்டவர், ஆர் எஸ் எஸ் குறித்து பேசுவதா? ஓநாய் சைவமாகிறதோ இல்லையோ, பன்றி பசுவாக மாற முடியாது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?