இது முதலமைச்சருக்கு அழகா…? தமிழர்கள் மீது பழி சுமத்த போடும் நாடகம்… CM ஸ்டாலின் மீது பாஜக குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
22 May 2024, 11:49 am

ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துக்களின் சாவியை திருடியவர்களை விமர்சித்தால், இவர் ஏன் தமிழர்கள் மீது பழி சுமத்தியதாக நாடகமாடுவதா..? என்று முதலமைச்சர் ஸ்டாலினை பாஜக விமர்சித்துள்ளது.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது ‘தமிழ்ப்பற்றாளர்’ வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி. ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார். வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா? வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க: பிரதமர் என்ன பேசினார் என்பதை கூட புரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவதா? அண்ணாமலை கண்டனம்!

அவரது இந்தப் பதிவுக்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள X தளப்பதிவில், “தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்தும், தனது ‘ மோடி வெறுப்பாளர்’ முகமூடியை கலைக்க மறுக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!. ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துக்களின் சாவியை திருடியவர்களை விமர்சித்தால், இவர் ஏன் தமிழர்கள் மீது பழி சுமத்தியதாக நாடகமாடுகிறார்?

வட இந்தியர்களை காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் திமுக வுக்கு தான் கை வந்த கலை! ஆனால், பிரதமரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது முதல்வருக்கு அழகா?, அரசியலுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்!, எனத் தெரிவித்துள்ளார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!