மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்த திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
அண்மையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்என் ரவியை கண்டித்தும் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மாமி என்று அழைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
பிராமண சமூகத்தை விமர்சிக்கும் நோக்கில் அவர் இப்படி குறிப்பிட்டு பேசியதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த வகையில், பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, தயாநிதி மாறனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நிர்மலா “மாமி” என்று பிராமணர்கள் பேசும் தொணியில் புளகாங்கிதம் அடைகிறார் தயாநிதி மாறன். கிண்டல் செய்வதாக யாரும் தவறாக நினைக்க வேண்டாம். “தொட்டில் பழக்கம் …….” என்பதன் அடிப்படையிலேயே அப்படி அழைக்கிறார்.
அதாவது அவரின் தாயார் திருமதி. மல்லிகா மாறன் அவர்கள் பிராமண சமூகத்தை சேர்ந்தவர். கல்யாண சுந்தரம் ஐயரின் மகள். அது மட்டுமல்ல, தயாநிதி மாறனின் மனைவி ப்ரியா தயாநிதி அவர்கள் ஹிந்து குழுமத்தின் இயக்குனர் ரமேஷ் ரங்கராஜன் ஐயங்கார் அவர்களின் மைத்துனி.
பெற்று வளர்த்த தாய், உயிரென கரம் பிடித்திருக்கும் மனைவி இருவரின் தாக்கம் தயாநிதி மாறன் அவர்களிடம் இருப்பதில் வியப்பில்லை. வீட்டில் கூட அதே தொணியில் பேசிக் கொண்டிருந்தாலும் வியப்பில்லை. தவறில்லை. அதனால் அம்மாவின், மனைவியின் சமூக பழக்க வழக்கங்கள், சொல்லாடல்கள் மகனிடம், கணவரிடம் இருப்பது இயல்பு தான். அவர் ஒரு சமூகத்தை ஏளனம் செய்வதாக எண்ண வேண்டாம்.
அரசியலுக்காக, அதிகாரத்திற்காக, பதவிக்காக, அது தரும் வசதிக்காக, செல்வத்திற்காக, பிராமண சமுதாயத்தை கிண்டல் செய்வது பிழைப்பிற்காக என்பது உலகறிந்த உண்மை, என தெரிவித்துள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.