பாஜக ஒரு இடத்தில் ஜெயிச்சால் தற்கொலையா..? அந்தர் பல்டி அடித்த தமிழன் பிரசன்னா ; ஆதாரத்தை நீட்டிய பாஜக..!!
Author: Babu Lakshmanan25 October 2023, 1:39 pm
பாஜக ஒரு இடத்தில் ஜெயிச்சால் தற்கொலையா..? அந்தர் பல்டி அடித்த தமிழன் பிரசன்னா ; ஆ தாரத்தை நீட்டிய பாஜக..!!
தனியார் டிவி விவாதத்தின் போது பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றால், தற்கொலை செய்து கொள்வதாக திமுகவைச் சேர்ந்த தமிழன் பிரசன்னா கூறியதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழன் பிரசன்னா, அதுபோன்று நான் எங்கேயும் சொல்லவில்லை என்றும், ஆதாரத்தை வெளியிட்டால் அரசியலை விட்டு விலகுவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக தமிழகத்தில் வெற்றி பெற்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று தமிழன் பிரசன்னா அவரது X தளத்தில் பதிவிட்ட ஸ்கிரீன் ஷாட்களை கருப்பு முருகானந்தம் வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- திறனற்ற திமுகவைச் சார்ந்த தமிழன் பிரசன்னா அவர்கள் நாகரீகத்தை கற்றுக் கொண்டால் நல்லது. தமிழகத்தின் மதிப்புக்குரிய ஆளுநர் திரு ஆர்என் ரவி அவர்களை மரியாதையின்றி ஒருமையில் பேசுவது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. நேற்றைய தினம் சொல்லதிகார நிகழ்ச்சி விவாதத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறியது இல்லை என்று மார்தட்டிக்கொண்டார். தாங்கள் பதிவிட்ட பொன் வார்த்தைகளை.
03-05-2021 அன்று X தளத்தில் தமிழன் பிரசன்னா அவர்கள் பக்கத்தில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் கூட தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ள தங்களது பதிவை, இப்போது நீங்கள் நீக்கினாலும் அதற்கான ஸ்கிரீன்ஷாட் ஆதாரம் என்றும் அழியாது. நேரத்திற்கு ஏற்பார்போல் நடந்துகொள்வது பிரச்சனை என்றவுடன், பதிவை நீக்குவது எல்லாம் தங்களின் பழக்கவழக்கம் ஆகும்.
தேர்தல் முன்பு தாங்கள் கூறியதை தமிழகம் முழுவதும் அனைவரும் அறிவர். இவ்வாறு வார்த்தைக்கு வார்த்தை மாற்றி மாற்றி பேசுவது என்பது தங்களின் தவறல்ல, அது தாங்கள் உள்ள கட்சியின் கொள்கையாகும். எனவே இயல்பாகவே அது தங்களுக்கும் வந்துவிடும். ஓடுவதோ பின்வாங்குவதோ எங்கள் கொள்கை இல்லை.
சில தினங்களுக்கு முன்பு கூட தங்களுடைய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நீதிமன்றத்தில் பொய்யுறைதார். தான் உதயநிதியாக தான் கூறினேன், அமைச்சராக இல்லை என்று அன்றும் இன்றும் மாற்றி மாற்றி பேசினார். இது தங்கள் இயக்கத்தின் வழக்கம் என்று இப்போது நீங்களும் நிரூபித்துள்ளீர்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.