ரயில் விபத்துக்கு பிரதமர் பொறுப்பு-னா… கள்ளச்சாராய சாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காரணமில்லையா…? எச்.ராஜா கேள்வி

Author: Babu Lakshmanan
6 June 2023, 8:27 am

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 22 பேர் உயிரிழந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக சொல்லாதவர்கள்,எதிர்பாராமல் நடந்த ரயில் விபத்துக்காக பிரதமரை மட்டும் பதவி விலக சொல்வது ஏன் ? என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 9வது ஆண்டு சாதனைகள் குறித்து பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார் :

அப்போது, அவர் பேசியதாவது :- நீண்ட நாட்களாக செய்யாமல் இருக்கும் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் அது தான் நல்ல அரசாக இருக்கும். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி தீர்க்க முடியாமல் பல ஆண்டுகளாக இருந்த பல பிரச்சினைகளை தீர்த்து வைத்தது. ஆர்டிக்கல் 370 அத்துடன் 35Aவை ரத்து செய்தது.

ராமர் கோவில் பிரச்சினையை மிக சுலபமாக தீர்த்தது. இந்தியாவிலேயே ஒரு மிக பெரிய சிக்கலான விஷயத்தை சரி செய்தது பா.ஜ.க. அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ன செய்யப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், மிக சுலபாக இந்த பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வந்தது.

அனைவருக்கும் வீடு திட்டத்தில் 3 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுத்துளளோம். 11 கோடி 72 லட்சம் மக்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். 1 லட்சம் கோடி வேளாண்மை துறையில் முதலீடு செய்துள்ளோம். விளிம்பு நிலை விவசாயிகளுக்கு எண்ணற்ற நல்ல திட்டங்களை கொடுத்துள்ளோம்.

20 லட்சம் கோடி கடன் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும்
1.33 லட்சம் கோடி பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. சீனாக்காரன் உற்பத்தி பண்ணியதில் மிக பெரிய பிரச்சினை இந்த கொரோனோ. 250 ஆண்டு நம்மை ஆண்ட பிரிட்டீசிடம் கூட பேரசெட்டமல் இல்லை. நாம் கொடுத்து உதவினோம்.

என்.ஐ.ஏ சரியான ஆதாரங்கள் இல்லாமல் சோதனை அல்லது கைது நடவடிக்கை எடுப்பதில்லை. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 ஆக உள்ளது. சீனா கூட நமக்கு பின்னர் தான் உள்ளது. 2017ல் இருந்து ஜி.எஸ்.டியை கொண்டு வந்தோம். பொது மக்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர், எனக் கூறினார்.

ஒடிசா கோர ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது என்கிற கேள்விக்கு ?
22 பேர் கள்ளச்சாரயத்தில் இறந்த போது செந்தில் பாலாஜி அல்லது மு.க ஸ்டாலின் ராஜினாமா செய்தார்களா? ஆனால் இந்த ரயில் விபத்தில் மட்டும் பிரதமர் பதவி விலக வேண்டும் என கூறுவது ஏன் ?

திருமாவளவன் சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்த காரர். உண்மையில் ரயில் விபத்து மிகவும் கவலை அளிக்கும் விஷயம்.என்ன காரணம் இந்த ரயில் விபத்திற்கு ? கண்டிப்பாக நாம் கண்டு பிடிப்போம். பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

திருச்சியில் கே.என் நேருவிடம் கேள்வி கேட்டால் என்ன
சொல்கிறார் ? அரசு மற்றும் வேறு எந்த விஷயத்திற்கும் அவர் பதில் கூற மாட்டார். சாக்கடை அடைத்தால் சொல்லு பதில் சொல்கிறேன் என்கிறார். செந்தில் பாலாஜியை பற்றி பேச எந்த அமைச்சருக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை.

செந்தில் பாலாஜி வீட்டில் 150 கிலோ தங்கம் பிடிப்பட்டதாக கூறுகிறார்கள், எனக் கூறினார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவர் பேசியதாவது :- ஆடு புல்லு புலி கதை தான் … எதிர் அணிகள் இந்தியாவில் ஒன்று சேர வாய்ப்பு இல்லை, என்றார்.

மல்யுத்த வீரர்கள் போராட்டம் மதிக்கப்டவில்லை என்கிற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு ?, 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை செய்தனர். FIR போட்டப்பட்டு விசாரணை செய்த காவலர்கள், குற்றம் சாட்டியவர்களை உடனடியாக
கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறிவிட்டனர். இந்த விவகாரத்தில் வேண்டும் என்றே தவறாக பொய் செய்தியை பரப்பி வருகிறார்கள், எனக் கூறினார்.

  • lokesh kanagaraj movie actor sri present fitness photo shocking fans லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…