இந்துக்களை பிச்சைக்காரர்களாக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்… கருணாநிதி, சோனியா செய்த தவறை சரிசெய்யும் பாஜக : H.ராஜா ஆவேசப் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
24 February 2023, 8:26 pm

ராணிப்பேட்டை ; இந்துக்களை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பிச்சைக்காரர்களாக்குவதாக பாஜக மூத்த தலைவர் H.ராஜ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வக்பு போர்டு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் வீட்டு மனை உரிமையாளர்கள் “ஆலோசனை கூட்டம்” நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் H.ராஜா கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- – திருச்சிக்கு அருகே உள்ள திருச்செந்துறை பகுதியில் உள்ள ஒரு கோயில், அந்த கோயில் வக்பு போர்டுக்கு சொந்தமானது என்று ஒரு சுற்றறிக்கை வந்துள்ளது. தவறு செய்யும் அதிகாரிகள் பிடித்து சிறையில் அடைத்தால் தான் மற்ற அதிகாரிகள் தவறு செய்ய மாட்டார்கள்.

தமிழகத்தில் வக்பு போர்டு வெளியிடும் அனைத்து சுற்றறிக்கையும் பொய்யானது. மேலும் ஹிந்துக்களுடைய நிலங்கள் பறித்து அவர்களை பிச்சைக்காரர்களாக மாற்ற ஆளும் திமுக அரசு முயல்கிறது. இது முற்றிலும் தீய எண்ணம் வன்மையாக கண்டிக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

  • Mysskin controversial speech வாய திறந்தால் கெட்ட வார்த்தை…மேடை நாகரீகம் தெரியாதா…மிஷ்கினை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்கள்..!