‘முட்டாள்… இது உங்களுக்கு இல்ல’… சிஏஏ விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை திட்டிய பாஜக சீனியர்..!!

Author: Babu Lakshmanan
14 March 2024, 1:09 pm

CAA தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படாது என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலினை பாஜக மூத்த தலைவர் வசைபாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை திருத்த சட்டம் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் கண்டங்களை தெரிவித்து வருகின்றார். மேலும்,கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தங்கள் மாநிலத்தை இந்த சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என்றும் அறிவித்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு அமல்படுத்தினாலும், தற்போது தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என தெரிவித்திருந்தார். மேலும், இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை என்றும், இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், ரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் திமுக அரசின் கருத்து என்றும் கூறினார்.

இதனிடையே, சிஏஏவை யாராலும் தடுக்க முடியாது என்றும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தத் திட்டம் அமல்படுத்துவது உறுதி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், “முட்டாள், அது காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கானது. தமிழ்நாட்டுக்கானது அல்ல என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி X தளத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல செய்தி சேனல் ஒன்று சிஏஏ குறித்த முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்தை செய்தியாக பதிவிட்டிருந்ததை சுட்டிக்காட்டி இந்தப் பதிவை அவர் போட்டுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி