கேள்வி கேட்க தமிழகத்தில் யாருக்குமே தகுதி இல்லை என்ற இறுமாப்பா..? அண்ணாமலை குறித்து விமர்சித்த நிதியமைச்சர் பிடிஆருக்கு பாஜக கேள்வி..

Author: Babu Lakshmanan
28 March 2022, 2:10 pm

அண்ணாமாலையை விமர்சித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாரயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- அண்ணாமலை அவர்கள் நிதி நிலை அறிக்கையை முறையாக படிக்கவில்லை என்றும், பொதுமேடைகளில் விமர்சிக்கும் தகுதியில்லாதவர்களின் தவறான அறிக்கைகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்றும், பட்ஜெட்டுக்கு பின்னர் டில்லி சென்று மத்திய நிதியமைச்சர் மற்றும் நிதித்துறை செயலாளரை சந்தித்தேன், பல்வேறு வகைகளில் மத்திய அரசு, மாநில அரசுக்கு ரூபாய் 28,000 கோடி நிலுவை தொகை செலுத்த வேண்டும் என்ற ஒருமித்த கருத்து அந்த சந்திப்பில் எட்டப்பட்டது” என்றும் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் நேற்று கூறியுள்ளார்.

Image

நிலுவை தமிழகத்திற்கு பாக்கி உள்ளது என்று நிதியமைச்சர் கூறிக்கொண்டிருந்த நிலையில், நிதிநிலை அறிக்கையில் இழப்பீடு உள்ளிட்ட ஜிஎஸ்டி நிலுவை அதிக அளவில் வந்துள்ளது என்றே அண்ணாமலை அவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெளிவாக கூறினார். இதை முறையாக சில நாட்களுக்கு முன்பு வரை ரூபாய் 16,500 கோடி ஜிஎஸ்டி செவிமடுக்காதது நிதியமைச்சர் தான்.. தமிழில் தெளிவாக அண்ணாமலை அவர்கள் பேசியது புரியவில்லை என்றால் ஆங்கிலத்தில் பேச சொல்கிறாரா நிதியமைச்சர்? அல்லது தமிழகத்தில் பொது மேடைகளில் தமிழில் பேசுவது தகுதி குறைவு என்கிறாரா?

ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பொருளாதாரம் குறித்து பேச தகுதி இல்லை என்கிறாரா? அல்லது பொறியியல் பட்டதாரி என்பதால் அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்கிறாரா? முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர் என்பதால் தகுதி இல்லை என்கிறாரா? அல்லது தன்னை கேள்வி கேட்க, விமர்சிக்க தமிழகத்தில் யாருக்குமே தகுதி இல்லை என்ற இறுமாப்பா? கல்வியில் சிறந்த அண்ணாமலையையே கேள்வி கேட்க தகுதியில்லாதவர் என்றால், கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கும் நம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களையும், விமர்சிக்கும் இடத்தில் இருக்கும் என்னை போன்ற சாமான்யர்களையும் என்ன சொல்வாரோ தமிழக நிதியமைச்சர்?

PTR - updatenews360

மேலும், 28,000 கோடி நிலுவை தொகை பல்வேறு துறைகளில் வரவேண்டியுள்ளது என ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது என்று கூறும் நிதியமைச்சர், ஒருமித்த கருத்து எட்டப்பட்டதற்கான ‘ஆதாரத்தை’ வெளியிட வேண்டும். மேலும், எந்தெந்த துறைகளிலிருந்து பணம் வரவேண்டியுள்ளது?எவ்வளவு நாட்களாக வரவேண்டியுள்ளது?என்ன காரணங்களினால் வராமல் உள்ளது? போன்ற விவரங்களை வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறையின் காரணமாக நிலுவையா? அல்லது திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசு உரிய நேரத்தில் உரிய பணிகளை முடிக்காததாலோ, அல்லது முடிந்த பணிகளுக்கான உரிய கணக்குகள் மத்திய அரசுக்கு உரிய நேரத்தில் கொடுக்காததால், மேற்கொண்டு நடக்கும் பணிகளுக்கு நிதி அளிக்கப்படமால் உள்ளதா என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அதை விடுத்து, கேள்வி கேட்பவர்களின் தகுதி குறித்து பேசுவது பி டி ஆர் தியாகராஜன் அவர்கள் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. அதிகாரம் இருப்பதால் ஆணவம் இருக்க வேண்டியதில்லை. அறிவு உள்ளதால் அகந்தை இருக்க வேண்டிய அவசியமில்லை. படிப்பு உள்ளதால் பண்பு அகல வேண்டிய கட்டாயமில்லை. விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையையும், கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் தவறுபவர்களுக்கு தான் தகுதியில்லை என்பதை நிதியமைச்சர் உணர வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 1407

    0

    0