ஜனாதிபதியை குறித்து கொச்சை பேச்சு.. பிரதமர் மோடி மீது பாஜக நடவடிக்கை எடுக்குமா..? கார்த்தி சிதம்பரம் கேள்வி..!!
Author: Babu Lakshmanan9 May 2024, 2:25 pm
காங்கிரசுடன் திமுக கூட்டணியை முறித்துக் கொள்ளுமா என்ற மோடியின் பேச்சு பேராசை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை சூளைமேடு கில் நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பங்கேற்று திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார்.
அவருடைய கருத்துக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரும் அவருடைய பதவியை ராஜினாமா செய்து விட்டார். காங்கிரஸ் கட்சி குடியரசு தலைவர் தேர்தலின் போது குடியரசுத் தலைவரின் நிறம் மற்றும் தோல் ஆகியவற்றின் காரணமாகத்தான் வாக்களிக்கவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பாஜக மோடி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. அது ஒரு கொச்சையான குற்றச்சாட்டு, என்றார்.
திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொள்ளுமா..? என்ற மோடியின் பேச்சு என்பது பேராசை எனவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுகவும் ஒற்றுமையாக உள்ளது. 39 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெறும், என்றார்.
மேலும் படிக்க: 5 வயது சிறுமியை நாய் கடித்த விவகாரம்… சமூக வலைதளங்களில் வெளியான தகவல் ; சென்னை மாநகராட்சி மறுப்பு..!!
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண விவகாரத்தில், அது கொலையா..? தற்கொலையா..? என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை தொடங்கி ஓரிரு நாட்களே ஆவதால் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது.
நிச்சயமாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். ஜெயக்குமார் மரண விவகாரத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக கருத முடியாது, என்றார்.
இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் இரண்டு மாதம் தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் நடுநிலையை யோசிக்க வைக்கிறது, என்றார்.