முதலமைச்சர் ஸ்டாலினே நினைத்தாலும் தடுக்க முடியாது… விளம்பரத்திற்காக திருமாவளவன் இப்படி பேசுகிறார்… திருச்சி சூர்யா சிவா!!

Author: Babu Lakshmanan
7 October 2022, 10:47 am

முதலமைச்சர் நினைத்தாலும் ஆர்.எஸ்.எஸ் பேரணியை தடுத்து நிறுத்த முடியாது என்று பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.

இந்து மதத்தை பாதுகாக்கும் வகையிலும், இந்து மதத்துக்கு ஆதரவாகவும் ஊடகங்களில் பேசிவரும் எனக்கு கைலாசாவிலிருந்து சுவாமி நித்யானந்தா சார்பாக அவர்கள் முன்னிலையில் எனக்கு தர்ம ரக்ஷன அவார்டு காணொலிக் காட்சி மூலமாக சுவாமிஜி வழங்கினார்கள். அது 100% மகிழ்ச்சி அடைகிறேன், எனக் கூறினார்.

இந்து பெருமையை பேச பாஜகவில் அநேகர் இருக்கையில் உங்களுக்கு கொடுத்தது எப்படி என்ற கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது ;- அதுதான் விஷயமே, திராவிட சித்தாந்தத்தில் வந்துட்டு இன்னைக்கு வெளியில் பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதத்தை பாதுகாத்து பேசறதுக்கு அவார்டு கொடுக்க கூடிய இடத்திலிருந்து நான் வேண்டுமென்றால் பெருமையாக பேசலாம் தவிர, நாளைக்கு பத்திரிக்கையாளர்கள் இந்த கேள்வி கேட்கும் பொழுது அவமானமாக நினைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்து மதத்திற்கு சாதகமாக பேசக்கூடிய அவார்ட் கொடுக்கிறார்கள் என்றால், யாரும் செய்யாத ஒன்றை நான் செய்கிறேன் என்ற சூழ்நிலையை தான் நான் பார்க்கிறேன்,” எனக் கூறினார்.

தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் பேரணி தமிழ்நாட்டில் நடத்தவே கூடாது என்று இடதுசாரிகள் சொல்லி வருகிறார்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது ;- நடத்தவே கூடாது என்று நினைக்கலாம். ஆனால் நூறு சதவீதம் யாராலும் தடுக்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தே தீரும். திருமாவளவன் அல்ல, தமிழக முதலமைச்சரே நினைத்தாலும் தடுக்க முடியாது.

தமிழகத்தில் யாரும் ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்த்துப் பேசுவதில்லை. 100% பெரும்பான்மையாக இருக்கக்கூடிய கட்சிகளான திமுக, அதிமுக, பாமக போன்று பெரிதாக பேசக்கூடிய கட்சிகள் பேசுவது கிடையாது. திருமாவளவன் தன்னை பேசும் பொருள் ஆக்குவதற்காகவும், RSS-ன் உண்மையாக குணத்தையும் தெரிந்ததால், அந்த சங்கத்துடைய பலத்தை அறிந்து அவர் பேட்டியிலேயே நூறாண்டு காலமானாலும் அவர்கள் அழிக்க முடியாது என கூறியுள்ளார்.

அதன் வளர்ச்சியை தடுக்க கூடிய அவரது முயற்சிகளாக இருக்கும். அடையாளம் தெரியாத நபராக இருக்கலாம். இன்னும் ஒரு சீட்டுக்கு ரெண்டு சீட்டுக்கும் திமுக கொடுக்கிறது. அதை வளர்க்க வேண்டும் அல்லவா.

அதிமுகவில் எங்களுக்கு கேட்ட இடங்கள் கிடைக்காததால் உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் பெரும்பான்மையாக தனித்து நின்றோம். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் நின்று ஜெயித்து அமைச்சர்கள் வருவார்கள். நேரடியாக தாமரை சின்னத்தில் நிற்போம், என தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 468

    0

    0