பாஜக தான் ஆட்சிக்கு வரும்.. வேற வழியே இல்லை : பாஜக பிரமுகர் நமீதா கருத்து!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2024, 2:45 pm

புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் தனியார் ரிசார்ட் திறப்பு விழாவில் நடிகை நமீதா பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்..அரசியல் பற்றி பேச மாட்டேன் என முதலில் கூறினார் இருப்பினும் ஜனநாயக திருவிழாவில் முடிவுகள் நாளை வர இருக்கிறது அது பற்றி கேட்டதற்கு,நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது..

ஒரு மாநிலத்திற்கான தேர்தல் அல்ல இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் வாக்களித்து முடிவு எடுத்து விட்டனர்.எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

மேலும் படிக்க: 64 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.. பெண் வாக்காளர்களுக்கு சல்யூட் : பறந்த மீம்ஸ்.. தேர்தல் ஆணையர் விளக்கம்!

2019ல் நான் பாஜகவில் சேர்ந்த போது தவறான முடிவு எடுத்ததாக பலரும் தெரிவித்தனர். ஆனால் நான் சரியான முடிவு எடுத்ததாக உறுதியாக நம்பினேன்.

தற்போது நாடு நல்ல முன்னேற்றத்திற்கு சென்றுள்ளது.அதனால் தான் பாஜகவில் சேர்ந்தேன்.இன்னும் நமது நாடு முன்னேற போகுது.பாஜக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும்,வேறு வழியில்லை என்றும் நமீதா தெரிவித்தார்..

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!