2026 தேர்தலில் கோவையில் 6 எம்எல்ஏக்களை பாஜக பெறும்.. இது நடக்கும் ; அண்ணாமலை சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2024, 7:47 pm

திமுகவிற்கு கிடைத்துள்ள இந்த வெற்றி நிரந்தரமானது அல்ல. வரும் சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணிக்குள் ஈகோவிற்கு இடமில்லை. விக்கிரவாண்டி தொகுதி இடை தேர்தலில் பா.மக போட்டியிட வேண்டும் என கூட்டணியில் ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது.

பாமக நின்றாலும் பாஜ. கடுமையாக பாடுபடும். திமுகவிற்கு கிடைத்துள்ள இந்த வெற்றி நிரந்தரமானது அல்ல. வரும் சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலும் பா.ஜ.,வெற்றி பெறும்.

திமுகவில் 39 எம்.பிக்கள் இருந்தாலும் தமிழக பிரச்னைகளை ஆக்கப்பூர்வமாக எடுத்துசொல்லும் ஒரே எம்.பி.,யாக எல். முருகன் உள்ளார். பிரதமர் தமிழகத்திற்கு எப்போது வருவார் என்பது நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பல கேபினட் அமைச்சர்கள் இருந்தாலும் அந்த மாநிலத்திற்கு கிடைத்திருக்கும் நிதியை விட தமிழகத்திற்கு அதிக நிதி கிடைத்திருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி