40 நாள் கோவையில் தங்கி முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தாலும் பாஜக தான் வெல்லும் : அண்ணாமலை சவால்!!
Author: Udayachandran RadhaKrishnan22 March 2024, 9:53 pm
40 நாள் கோவையில் தங்கி முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தாலும் பாஜக தான் வெல்லும் : அண்ணாமலை சவால்!!
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
தமிழ்நாடு அரசியல் தான் எனக்கு முக்கியம்; டெல்லி அரசியலில் விருப்பம் இல்லை. பிரதமர் மோடியின் உத்தரவை மதித்து நடப்பவன் நான். பிரதமர் மோடியின் விருப்பத்தினாலேயே கோவை தொகுதியில் போட்டியிடுகிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பா.ஜ.க. வெல்லும். தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையிலிருந்து ஆரம்பமாக வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 40 நாட்கள் தங்கி இருந்து பரப்புரை செய்தாலும் கோவையில் பா.ஜ.க. தான் வெல்லும். 2026-ல் ஆட்சி அமைக்கவே பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.