25 தொகுதிகளில் பாஜக வெல்லும்…. பொதுக்கூட்டத்தில் அறிவித்த அமித்ஷா : அதிமுக ரியாக்ஷன்!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2023, 5:38 pm

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான அமித்ஷா, கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ளார். இன்று தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள், தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் சென்னை கேளம்பாக்கத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில அமித்ஷா பேசுகையில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25 தொகுதிகளை வெல்ல வேண்டும் என குறிப்பிட்டதாக வந்த செய்தியை அடுத்து, இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, கூட்டணி பேச்சுக்கு முன்பாக எத்தனை தொகுதி என்பதை முடிவு செய்ய முடியாது, கூட்டணி குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும்.

மேலும் தமிழ்நாட்டில் பாஜவுடனான கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்று கூறியுள்ளார். வரும் காலங்களில் தமிழர் பிரதமராக உருவாகவேண்டும் என அமித்ஷா பேசியிருந்தார், இதனை வரவேற்பதாகவும் செம்மலை கூறியுள்ளார்.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?